பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1
தமிழ் இலக்கியத்தின் தொன்மை

மிழ்மொழி இனிமை வாய்ந்தது என எல்லாரும் ஒப்பக் கூறுகின்றனர். அது செந்தமிழ், தீந்தமிழ், தமிழ் எனும் இனிய தீஞ்சொல் என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறது. தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாம். “தேமதுரத் தமிழ்” என ஒருவர் அதைப் பாராட்டியுள்ளார். தமிழ்மொழி இவ்வளவு இனிமை வாய்ந்திருப்பதற்குக் காரணம் யாது? அம்மொழி . அறிந்த பெரியார்கள், அவ்வப்போது ஒன்றுகூடி, மொழியை இனிமை நிறைந்ததாக ஆக்குவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து, அதை அவ்வாறு ஆக்கியுள்ளனர். இவ்வாராய்ச்சி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளது. அறிவிற் சிறந்த சான்றோர்களின் உள்ளங்களில் தோய்ந்து தோய்ந்து, தமிழ்மொழி இனிமை நிறைந்த மொழியாகிய பெருமையுற்றுள்ளது.

தமிழ் மொழி, அவ்வாறு பெற்ற அவ்வினிமைப் பண்பை, இன்று பெறவில்லை; சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே, அது அந்நிலையை