பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனாா்

39

கலைகள் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழினத்தின் அனைத்துக் கலைகளும் படிப்படியாக அழிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன

இறுதியிலே இன்னுமொரு பத்தாண்டு, இருபதாண்டு போனால், நம்முடைய இளைஞர்களிடத்திலே தமிழ் மொழியைப்பற்றிக் கூறினால், அவர்கள் அதை ஏளனமாகக் கருதுகின்ற நிலைதான் உள்ளது. 'தமிழ்மொழியா அதென்ன உங்களுக்கு இவ்வளவு மொழி வெறி. அது வெறும் கம்யூனிகேசன்’தானே, என்று நம் இளைஞர்களே நம்மை இழிவாக(கேவலமாக)ச் சொல்லும் இழி நிலையாக, கடுமையாக, வெறுப்பாகக் கருதிக்கொள்ளும் நிலைதான், இப்போதைய இளைஞர்களின் நடுவில் நிலவிக்கொண்டிருக்கிறது. நன்றாக நினைத்துப் பாருங்கள். எனவே, இனிமேல் எந்த நிலையாக இருந்தாலும் சரி, நாம் ஒன்றுபட வேண்டும். பல நிலைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்,

நாம் எல்லா நிலைகளிலும் தனித்தனியாக இயங்குகின்றோம்:

திராவிடர் கழகம் இனிமேல் ஓர் உண்மையான திராவிட இனத்தினுடைய, தமிழ் இனத்தினுடைய தன்மான உணர்வை அது வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்கிற நிலையிலே, பெரியார் தோற்றுவித்த தீவிர இயக்கம் என்ற உண்மைப் பாதையிலே நின்று, அதை மக்களிடம் ஏதாவது சொன்னால், அது கடவுள் இல்லை என்ற நாத்திகத்தைக்கூறும் கழகம் என்று கூறி. எனவே நாங்கள் அந்த இயக்கத்தை மதிக்கவில்லை என்று கூறும் இளைஞர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையிலே சமயத்தைப் பொறுத்தோ, சாதி நிலைகளை வைத்தோ, தமிழினம் தன்னை ஈடேற்றிக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/49&oldid=1163410" இலிருந்து மீள்விக்கப்பட்டது