பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெஞ்சக் கனல்
கொடி ஏற்றம்–காப்பு


அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சினைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. இதற்கான சூழ்நிலையும் திறக்கிறது.

என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும்,கவியின் நளினமுமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்தியவேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிகையாளனை ‘நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன்.

இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் ‘பெரிய’ குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்து கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும் நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா? ‘ஆப்ஸர்வேஷன்’ எழுத்தாளனின் குணமாகுமா, குற்றமாகுமா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் எப்படி முடிவு கூறுவீர்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/7&oldid=1000175" இலிருந்து மீள்விக்கப்பட்டது