பக்கம்:கல்வி எனும் கண்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கல்வி எனும் கண்


உடையவன். ஆட்சிக்குழு ஒன்று தவிர்த்து பிற அனைத்திலும் பங்குகொண்டவன். சிலவற்றில் உறுப்பினனாகவும் சிலவற்றில் தலைவனாகவும் இருந்து பணியாற்றி வந்துள்ளேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் சில குழுக்களில் இடம் பெற்றவன் தமிழ்நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களிலும் வடநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பல குழுக்களில் இடம் பெற்றவன்: அக்காலத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஆற்றிய செயல்முறைகளுக்கும் இன்றைய செயல்முறைகளுக்கும் எத்தனையோ வேறுபாடுகளைஅவை தாழ்வுறும் வகையில்-இருக்கக் காண்கிறேன். எடுத்துக்காட்டுக்கு இரண்டொன்று காட்ட நினைக்கிறேன். தவறாயின் பொறுத்திட வேண்டும்!

கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டிற்குப் புதிய பாடங்கள் வேண்டின் அதற்கு முந்திய ஆண்டு அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. முன்பெல்லாம் அவ்வாறு வந்த விண்ணப்பங்களை ஆய்ந்து, தகுதி அறிந்து, அவற்றை ஆய்வதற்கென ஆய்வுக்குழுக்களை (Inspection. Commission) சனவரி 31க்குள் அனுப்பப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்யும். அவற்றின் பரிந்துரைகளை ஆய்ந்து, பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் ஆட்சிக் குழுவின் கூட்டம் முடிவெடுத்து, மார்ச்சு முடிவுக்குள் அவ்வக் கல்லூரிகளுக்கு முடிவினைத் தெரிவிக்கும். கல்லூரி நடத்துபவர்களும் அவற்றின் அடிப்படையில் ஏப்பிரல், அல்லது மே திங்களில் விளம்பரங்கள் செய்து கல்லூரி திறக்கும்போது, சூன் மாதத்தில் மாணவர்களைச் சேர்ப்பர். இந்த முறை மாணவர்கள் சேரவும் ஆசிரியர்களை நியமிக்கவும் பிற ஏற்பாடுகளைச் செய்யவும் சிறந்த முறையாக அமைந்தது. ஆனால் தற்போதோ, ஒட்டு மொத்தமாக எல்லாக்கல்லூரிகளையும் இணைத்து ஏதாவது ஒரு காரணம்காட்டி, ஒரு பாடமும் தரமுடியாது என்று ஐந்து அல்லது ஆறு மாதங்கள், சில வேளை கல்லூரி திறந்த பிறகும் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு அத்தகைய பொதுஅறிக்கை ஒன்று 13-8-91இல்-ஆகஸ்டில்-