பக்கம்:கல்வி எனும் கண்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கல்வி எனும் கண்


பெயரைமட்டும் வைத்து திருப்தி அடைகிறோம். அவ்வளவே!

தமிழ்நாட்டு மிகப் பழைய பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகந்தான். அது 1857ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றியது. அதற்குச் சற்று முன்பாக அதே ஆண்டில் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தோன்றின என அறிகிறோம். இத்தகைய பழம்பெரும் பல்கலைக்கழகம் பரந்த எல்லையினைக் கட்டி ஆண்டது. கேரளம், கன்னடம், ஆந்திரப் பகுதிகளையும் ஐதராபாத் எல்லையினையும் அன்று சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டிருந்தது. இன்று ஒரிசாவுடன் இருக்கும் ‘கஞ்சம் தொடங்கிக் குமரி வரையிலும் மேல் கீழ் கடல் எல்லையிலும் இது ஆட்சி செலுத்தியது. எத்தனையோ வல்லவர்கள். நல்லவர்கள் இதில் இருந்து நாட்டு மேனிலைக் கல்வியினை நன்கு வளர்த்து வந்தனர். இன்று மொழி வாரி மாநிலங்கள் பிரித்தபின், பிறமொழிப் பகுதிகள் நீங்கியதோடு அன்றி, தமிழ்நாட்டிலும் மேலும் பதின்மூன்று பல்கலைக் கழகங்கள் தோன்றி, இதன் எல்லையினை மிகச் சுருங்க வைத்துவிட்டன. எனினும் அன்று இதன் ஆணையின்கீழ் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கையினைக் காட்டிலும் இன்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவம், விவசாயம், பொறியியல், கால்நடை போன்ற வகைக்கொரு பல்கலைக்கழகம் அமைந்து இ ன் அடிப்படைப் பகுதிகளையும் சுருங்கச் செய்துவிட்டன. இன்று தமிழகத்தில் தனிப்பட அண்ணாமலை, அழகப்பர், அவினாசிலிங்கம் போன்றோருடைய பல்கலைக்கழகங்கள். அம்பாத்துறை காந்தி கிராமம் பல்கலைக்கழகம் ஆகியவையும் தனி ஆணை செலுத்துகின்றன. தமிழுக்கும் மகளிருக்கும் என்றும் தனிப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆகவே பாட அளவிலும் பரப்பளவிலும் எல்லை சுருங்கியதாகச் சென்னைப் பல்கலைக் கழகம் நின்றுவிட்டது. தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தவிர்த்து, கோவை, திருச்சி, மதுரை