பக்கம்:கல்வி எனும் கண்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

29


90க்கு மேல் மற்றவர்கள்தானே பயில்கின்றனர். கிறித்தவப் பள்ளிகளிலும் சிறுபான்மையோர் நடத்தும் பிற பள்ளிகளிலும், அடிப்படையில் அமைந்த சிறுபான்மையோர் பள்ளிகளிலும் பயில்வோருள் 100க்கு 90க்கு மேல் அவ்வச் சிறுபான்மையைச் சாராதவர்கள்தாமே பயில்கின்றனர். இவற்றைச் சிறுபான்மையோர் கல்விச்சாலைகள் எனக் கொண்டு தனிச் சலுகைகள் அளிப்பது எப்படிப் பொருந்தும்? அவர்களே பெரும்பான்மையிராகவோ முற்றுமாகவோ பயின்றால் தனிச்சலுகைகள் தேவையே! அரசியல் சாசனத்தில் இதற்கு விளக்கம் தரப்பெறுதல் வேண்டும்.

எங்கோ சென்று விட்டேன். மன்னிக்கவும். தமிழ் நாட்டில் இவ்வாறு பலவகைக் கல்விகள் தொடக்கநிலையில் இருப்பது தேவைதானா! ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். உள்ள வேறுபாடு போதாது என்று இந்தப் புதிய வேறுபாட்டினை அரசாங்கமே உண்டாக்க வேண்டுமா? கல்வித்துறை நிர்வாகிகளும் அமைச்சகமும் கருத்திருத்தி உடன் இதற்கு மருந்து காண வேண்டும். கல்வியை மாநில எல்லையிலே கொள்ள வேண்டுமேயன்றி, மத்திய அரசுடன் இணைத்தல் தவறாகும். இதை உணரும் நாளே நாட்டில் உண்மையான கல்வி மலரும் நாள். தமிழ்நாட்டு அரசாங்கம் உடன் தீவிரமாகச் சிந்தனை செய்து தொடக்கக் கல்வி நிலையில் (10ம் வகுப்பு வரை) இத்தனை வேறுபாடுகள் இல்லையாகச் செய்யவேண்டும். இளம் பிஞ்சு உள்ளங்களில் கற்கும்போதே மாற்று எண்ணங்களை-வேறுபாட்டு உணர்வுகளை வளர்க்கும் கல்வி முறை களையப்படல் வேண்டும். இன்றேல் நகத்தால் கிள்ளுவதை விட்டுப் பின் கோடரி கொண்டு வெட்ட வேண்டிய நிலை உண்டாகும். இந்த அடிப்படை மாற்றம் செய்யாது, எத்தனை ஒருமைப்பாடு மாநாடுகள் கூட்டினாலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வரிசை வரிசையாக நிகழ்ச்சிகள் அமைத்தாலும் பயன் விளையாது. ஆரம்பக்