பக்கம்:கல்வி எனும் கண்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
    • கல்வி எனும் கண்**

19


கொடுமைகள்பற்றித் தேர்வாணையருக்கும் பெற்றோர் கடிதம் எழுதி இருப்பார்கள்.

முன்பெல்லாம் ஒரு பள்ளிமாணவர் மற்றொரு பள்ளியில் தேர்வு எழுதுவது 

வழக்கம். திரு வி க. பள்ளி கிறித்துவர் கல்லூரிப் பள்ளியில் எழுதலாம். கிறித்துவர் கல்லூரிப் பள்ளி வேறுபள்ளியில் எழுதலாம். வேறு பள்ளி மாணவர் திரு.வி.க. வில் எழுதலாம். இந்த முறை கல்லூரிக்கும் பொருந்தும். நான் பச்சையப்பரில் பணியாற்றிய ஞான்று பெரும்பாலும் லயோலா கல்லூரி மாணவர் பச்சையப்பரில் எழுதுவர்.

 இந்த முறை இருப்பின் மாணவர் உண்மையான திறன் கண்டு தெளியப் பெறும். இல்லையாயின் இன்று சிறந்த மாணவர்களுக்கு வழங்கும் பரிசை ‘லஞ்சமற்று’ வழங்கிய பரிசாகக்கொள்ள இயலாது. 
 மத்திய கல்வி நிலையங்களில் வேறு பள்ளியின் தலைவர் வந்து பள்ளியின் தேர்வை நடத்துவர். அதனினும் முந்தியது சிறந்தது. வேண்டுமாயின் மாணவர் அடையாளம் காட்ட, பயின்ற பள்ளியின் இரண்டொரு ஆசிரியர் தேர்வுப்பள்ளியில் கண்காணிப்பாளராகச் செல்லலாம்.
 ஒரு கல்லூரியில் மூன்றுமணி நேரத் தாளை நான்குமணி நேரம் எழுதவைத்ததோடு விடைகளையும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தார்களாம். எப்போதோ ஒரு முறை பல்கலைக் கழகப் பறக்கும்படை வரும். அப்போது சற்று நிமிர்ந்து விடுவார்களாம். இதுபற்றிச் சென்ற ஆண்டு பல்கலைக்கழகத்துக்குக் குறிப்புவந்ததாகக் கூறுகின்றனர்.
 ஆனால் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்ததோ தெரியாது. எனவே, தேர்வுமுறை இந்தவகையில் மாற்றி அமைத்தாலன்றி, சிறந்த மாணவருக்குப் பரிசு வழங்கல் ஒரு கேலிக்கூத்தாகவே முடியும்.

இனி பள்ளிநடக்கும் வேளையினைப்பற்றி எண்ணுவோம். மேலைநாடுகளிலும் அமெரிக்கா ஜப்பான் மலேசியா போன்ற கீழைநாடுகளிலும் பள்ளிகள் காலை 7.30 அல்லது 8க்குள்