பக்கம்:கல்வி எனும் கண்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்

71



இருந்தன) அக்காலத்திய பாடத்திட்டம் மாணவர் உளம் கொள்ளும் வகையில் அமைய எளிய வகையில் அமைந்து இருந்தது. (இன்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பெறலாம் என எண்ணுகிறேன்.) ஆயினும் அடுத்தடுத்து வந்த அமைச்சரவகைளும் பிறமாறுதல்களும் கட்சி அடிப்படையில் அமைந்த பிறவும் கல்வித்துறையில் மாற்றம் காணவிரும்பின. அன்றைய இந்தியா ஒன்றாகவே இருந்தாலும் கல்வியைப் பொறுத்த வரையில் மாநிலங்களில் மத்திய அரசு தலையிட்டது கிடையாது. அப்படியே நான் மேலே காட்டியபடி மாவட்டக் கழகங்களின் கீழே கல்விக் கூடங்கள் இருந்தமையின் மாநில அரசின் இடையீடும் அதிகமாக இருந்ததில்லை. பாடநூல்களும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, நல்ல ஆசிரியர்களால் எழுதப் பெற, பல வெளியீட்டகங்கள் வெளியிட, சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்தன. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தத்தம் ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, பிறநாடுகள், உலகம் ஆகியவற்றை வகுப்புதோறும் முறையாக அறியவும் வாய்ப்பு இருந்தது. அப்படியே தமிழ் இலக்கியங்களும் உரைநடைகளும் வகுப்புக்கு ஏற்ப அமைய, 2-3ஆம் வகுப்பில் ஆத்திசூடி தொடங்கி, பதினோராம் (Vl Form) வகுப்பில் கம்பர், சேக்கிழார் போன்றோர்தம் பேரிலக்கியங்களைப் பயில வாய்ப்பு அளித்தனர். கணக்கும் அந்த வகையிலேயே படிப்படியாக உயர இறுதி வகுப்பில் சிறந்த வகையில் அமைந்தது. ஆங்கிலம், வரலாறு போன்றவையும் அப்படியே.

இன்றுபோல் எல்லாவற்றையும் இளைஞர் தலையில் சுமத்தி, சுமக்க முடியாத பளுவில் நூல்களையும் குறிப்பேடுகளையும் சுமக்கவைத்து, எதிலும் தேர்ச்சிபெறாத ஒரு நிலை அன்றுகாண முடியாதது. பள்ளி இறுதி வகுப்பில் பயின்றார் தம் தெளிந்த அறிவு இன்றைய முதுகலைப் பட்டம் பெற்றவர் அறிவைக் காட்டிலும் எத்தனையோ வகையில் மேம்பட்டது