பக்கம்:கல்வி எனும் கண்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலையர் கல்வி

105


உள்ளங்களில் புகாமல் பாதுகாத்திட முயல வேண்டும். அதற்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் தக்க நெறிப்படும் குழந்தைகள்-இளங் குழந்தைகளுக்குப் பள்ளிகளை அத்துறையில் பயிற்சி பெற்ற நல்லாசிரியர்களைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழி. எனவே ஐந்து வயது நிரம்பிய பிள்ளை உள்ளங்களில் பதியும் எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தும் நல்லாசிரியர் பயிற்சிப் பள்ளிகளை உடன் தொடங்கி ஓராண்டு அல்லது ஈராண்டு அப்பயிற்சியை முடிக்க வழிகாண வேண்டும். ஊர்தொறும் அர்சாங்கமே - ஊராட்சியாளர் வழியோ பிறவழியோ அத்தகைய நல்லாசிரியர் கொண்ட மழலைப் பள்ளிகளை நிறுவி, அவை நன்கு நடைபெறுகின்றனவா என்பதைக் கவனிக்க வழிகாண வேண்டும் இந்த நிலையினை முதலில் செய்யின், வருங்கால நாடு கல்வியால் மட்டுமன்றிப் பிற எல்லா வகையாலும் ஏற்றமுறும் என்பது தெளிவு.

முதல் வகுப்புக்கு முன் உள்ள ‘L.K.G. U.K.G’ வகுப்புகளைப் பற்றிச் சிறிது காண்போம். சீருடை உடுத்து தலைசீவி பெரும் சுமையாகப் புத்தகங்களைத் தாங்கிக்கொண்டு இளஞ் செல்வங்கள் பள்ளிக்கு வருவதும், அவர்களை அழைத்து வந்து விட்டு, பின் திரும்ப அழைத்துச் செல்ல, தாயரும் பிறரும் வருவதும் ஒவ்வொரு பள்ளியிலும் கண் கொள்ளாக் காட்சியாகத்தான் உள்ளது. சில பெற்றோர்கள்-இருவரும் பணிசெய்பவர்களாக இருந்து, வீட்டில் பார்க்க வேறு யாரும் இல்லா நிலையில், மாலை அவர்கள் திரும்பும் வரையில், பள்ளியிலேயே தங்க வைத்துக்கொள்ளத் தனி ஏற்பாடுகளும் சில இடங்களில் உள்ளன. குழந்தைகள் மழலைமொழி கேட்டு மகிழவேண்டிய நல்லாசிரியர்கள், சிலசமயங்களில் வல்லாசிரியர்களாவதும் உண்டு. இந்த நிலையினால் அஞ்சும் குழந்தைகளுக்குக் கல்வியிலேயே வெறுப்புத் தோன்றும் சீருடை.யும் பிறவும் குழந்தை உள்ளத்தில் வேறுபாடுகள் தோன்ற

க.-7