பக்கம்:கல்வி எனும் கண்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதியோர் கல்வி

115


வெற்றியினை நாட்டு வெற்றியாகக் கொள்ள முடியாது. கல்லாமாக்கள் பெருவாரியாக உள்ள பகுதிகளில் தனி நிறுவனங்களும் அரசும் சேர்ந்து, பெருத்த முயற்சியிலும் செலவிலும் பாடுபட்டால் ஒரு வேளை வெற்றி காணலாமோ, என எண்ணுகிறேன். ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகக் கேரளமும்-மிசோராமும் இடையறாது பாடுபட்டு நின்ற காரணத்தினாலேதான் அங்கெல்லாம் நிறை நலமாக முதியோர் கல்வி வெற்றி பெற, கல்லாதார் இல்லையெனப் போற்றப் பெறுவது அறிகிறோம் (p. 200). அத்தகைய முயற்சியினை எல்லா மாநிலங்களும் மேற்கொண்டால் விரைவில் நாட்டில் கல்லாதார் இல்லையாவர். ஆம்! கற்ற ஆணும் பெண்ணும் அக்கல்லா மனிதனுடனோ பெண்ணுடனோ பழகி நின்று, அவர்கள் மனநிலை அறிந்து மெல்ல மெல்லக் கல்வியின் அவசியத்தைப் புகட்டி சிறு சிறு வகையில் எழுத்தறிவித்து, அவர்தம் மொழி வளர்க்கும் நெறியில் பயிற்றுவித்து, தாம் சோர்வு அடையாமல் தளர்ச்சியுறாமல் பயிற்றாளராகச் செயல்புரிவராயின் நிச்சயமாகப் பயன் விளையும். இங்கே இராமமூர்த்தி குழு இந்த முதியோர் கல்வி வளரத் தந்த சில கருத்துக்களை அப்படியே உங்கள்முன் வைக்கின்றேன் அவை அனைத்தும், என்னாலோ-மற்றவர் அனைவராலுமோ ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று நான் கொள்ளாவிடினும் இக்கருத்து செயலாற்றுவோருக்குத் தூண்டுகோலாக அமையும் என்பது என் துணிவு.

RECOMMENDATIONS

  1. Imperting of literacy should be placed in the context of the developmental needs of the adult. Adult education programmes should be accompanied by a wide range of measures relating to health, nutrition, housing, and employment needs. They should also address themselves in issues of fundamental rights, laws, secularism and