பக்கம்:கல்வி எனும் கண்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கல்வி எனும் கண்


-செல்வர் வறியர் யாவராயினும் பதினெட்டு நிரம்பப் பெற்றால் வாக்களராகவும், அதன் வழிச் சட்டமன்ற உறுப்பினராகவும்-ஏன்?-நாடாளும் அமைச்சராகவும் கூட ஆகலாம் என்ற நிலை வந்துவிட்டமையின் படிப்பில் கவனம் குறைந்தது. படிக்காத மேதை என்ற பட்டமும் வழங்கப் பெறும்-எப்படியும் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் கூடவே சேர்ந்துவிடும் பின் முதியோர் கல்வி எப்படி வளரும்? இந்த அவலநிலை ஜனநாயக நாட்டினை எப்படித் தலைதூக்க வைக்கும்? இதனாலேயே நாட்டில் பல்வேறு பிரிவுகளும் சாதி சமயச் சண்டைகளும் பிறகொடுமைகளும் நிகழ்கின்றன. ஒரு காலத்தில் கல்லாதவர் கற்றவர் சொற்கேட்டு அடங்கி நல்லவற்றை மேற்கொண்டு வாழ்ந்தனர் எனக் காண முடிகிறது.

1977-78இல் ஆரம்பித்த, நான் மேலே காட்டிய அரசாங்கச் சார்புடைய எழுத்தறிவியக்கம்-முதியோர் கல்வி முறை பல வகையில் இடர்ப்பட்டு சிலவிடங்களில் தொடங்கிய பள்ளிகள் மூடப்பட்டு பயனற்ற நிலையில், 1989இல் புதிய முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டது. இப்புதிய முறை கேரளம், கோவா, புதுவை, குஜராத் ஆகிய மாநிலங்க்ளில் நன்கு நடைபெற்றுப் பயனும் விளைந்துள்ளது என்பர். (p. 198). இதன் வழி, பல தனியார் நிறுவனங்கள் தாமே முன் வந்து, கல்லாதார் இருக்குமிடம் தாம சென்று, அவர்கள் ஓய்வு பெறும் நேரம் அறிந்து, அவர்கள் மன நிலைக்கும் மன நிறைவுக்கும் ஏற்ற வகையில் மெல்ல மெல்ல எழுத்தறிவித்து ஊக்குவிக்கும் நிலையினைக் காண்கின்றோம். இதனாலேயே அண்டை மாநிலமான கேரளத்திலே நூற்றுக்கு நூறு ஆணும் பெண்ணும் எழுத்தறிவு பெற்றுச் சிறக்கிறார்கள் என அறிய முடிகிறது. தமிழ்நாடு இப்போது தான் அந்த வழியினைப் பின்பற்ற நினைக்கிறது.

கேரளம் போன்ற ஒரு சில இடங்களில்-குறைந்த அளவில் கல்லாதவர் வாழும் பகுதிகளில் காணும்