பக்கம்:கல்வி எனும் கண்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிற் கல்வி

125


வேண்டும். இங்கேயும் பதவி உயர்வு முதலியவற்றிலேயும் இன்னார் இனியார் என்ற வேறுபாடு காட்டப்பெறுகிறது. என்பர். அடிப்படைத் தேவையான சாதனங்கள்-கருவிகள் கூட இல்லாமல் எப்படி இவை இயங்க முடியும் மத்திய அரசு இவற்றுக்கென வழங்கும் பெரும் தொகைகளை மாநில அரசு தன் செலவுகளுக்கென வேறு வகையில் செலவு செய்துவிடலாம். இதனால் முறையாகச் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளை அந்தரத்தில் விட நேரிடுகின்றது. 1989-90 இல் முடிக்கப் பெற்ற பணிகளுக்கும் செய்முறைகளுக்கும் சில பள்ளிகளுக்கு 1990 இடையிலேயே மத்திய அரசு முழு மானியத் தொகையினை மாநில, அரசுக்கு அனுப்பியும், இன்னும் அத்தொகைகள் உரிய கல்வி நிலைகளுக்குச் சென்று சேரவில்லை என்கின்றனர். பின் அவை எவ்வாறு நன்கு செயல்படும்? வேலியே பயிரை, மேயும் வகையில் இவ்வாறு பல மானியங்கள் இடையில் அரசாங்கத்தாலே அவலமாக்கப் பெறுகின்றன. இன்றைய அரசு இதைக்கண்டு ஆவன செய்யும் என நம்புகிறேன்.

கிராம மக்களை ஈடுபடுத்தும் வகையில் பல்கலைத் தொழிற் பள்ளிகள் (Polytecnics) இயங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறவேண்டும். கண்ணிருந்தும் குருடராய்-காதிருந்தும் செவிடராய் அனைத்தையும் கண்டு வாளாலிருந்தால், நாடு இன்னும் இழிநிலையைத்தான் அடையும். இவற்றை எண்ணி நாடாளும் நல்லவரும் பதவி வகிக்கும் பட்டதாரிகளும் அலுவலர்களும் பிறரும் நாட்டு நிலனிலே அக்கறை கொண்டு செயல்படுதல் நன்றாகும். முக்கியமாகத் தொழிற்கல்வி வளர அனைவரும் ஒன்றிச் செயலாற்றினால்தான் பயன் உண்டு. சமுதாயத்தோடு தொடர்புடைய தொழில்களை ஊர்தோறும் அமைத்து; அவற்றிற்குத் தொழிலியல் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றவர்களைத் தக்கவாறு அமைத்து, வேண்டிய உப்கரணங்களையும் பிறவற்றையும் தந்து அரசு ஊக்க