பக்கம்:கல்வி எனும் கண்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கல்வி எனும் கண்


ஆம்! தமிழ்நாட்டில் அரசாங்கம் சென்ற ஆண்டு ஒரு கல்லூரியோடு போட்டியிட்டு, வேறுபாடுற்ற நிலையினை நாடறியும். மேலும் ஆளுபவருக்கு உற்றவராகவும் பல்கலைக் கழகத்துக்குப் பலவகையில் வேண்டியவராகவும் இருப்பின் பொறியியற் கல்லூரி மட்டுமன்றி, புதிதாக எந்தக் கல்லூரியும் தொடங்க வாய்ப்பு உள்ளதை நாட்டு நடவடிக்கைகள் நன்கு விளக்குகின்றனவே. மாறிமாறி வரும் ஆளுபவர் கைப்பாவைகளாகப் பல கல்லூரிகள் இருக்கின்றன-அவை செயல்பட வேண்டிய நிலையில் மாணவர்களைத் திறனறிந்தவர்களாக ஆக்கும் வகையில் இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கிடமாக உள்ளதே. மற்றும் பெண்களுக்குச் சமஉரிமை என்று மேடையிலும் சட்டமன்றத்திலும் முழங்கும் நிலையிலும் தொழிற். கல்லூரியில் 12% சான்றிதழ் பள்ளிகளில் 17% தான் பயில்கின்றனர். சீர்மரபினர் அன்றி ஒதுக்கப்பட்டவர் பட்டப் படிப்பில் 5% சான்றிதழ் பள்ளியில் 9% உள்ளனர் (ப 237). இந்த அவல நிலையில் மகளிர் முன்னேற்றமும் தாழ்ந்தோர் உயர்வதும் முயற்கொம்பு-ஆகாயப்பூப் போன்றதாகும்.

இத்தகைய தொழிற் கல்லூரிகள் உரிமம் பெற்றவை பெறாதவை நன்கு இயங்குகின்றனவா எனக்காணல் அரசின் கடமையாகும். நல்ல ஆய்வுக் கூடங்கள், நல்லாசிரியர்கள், நல்ல கட்டடங்கள் இல்லாமலேயே பல இயங்குகின்றன எனப் பேசுகின்றனர்-அறிக்கை விடுகின்றனர். அரசோ பல்கலைக் கழகங்களோ இந்த அவல் நிலைகளைப் பற்றி எண்ணுவதில்லை போலும். வேண்டியவர்களாயின் ஒன்றும் இல்லாமலே எல்லா வகுப்புகளையும் தருதலும் வேண்டாதவராயின் எல்லாம் இருந்தும் ஏதோ காரணம் காட்டி ஒன்றும் தராது ஒழிப்பதும் பல்கலைக் கழகச் செயலாக அமைவது என்கின்றனர்.

பொறியியல், மருத்துவத்துறை போன்றவற்றிலும் கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்றவற்றிலும் தக்க அனுபவம் மிக்கவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க