பக்கம்:கல்வி எனும் கண்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலையர் கல்வி

103


பொறுத்தவரையில் அதற்கேற்ப ஆத்திசூடி கொன்றை வேந்தன் தொடங்கி அறநெறிகளை வற்புறுத்தி வழிகாட்டும் பேரிலக்கியங்கள் வரிசை வரிசையாக-முறை முறையாக வகுப்பு நிலைக்கு ஏற்ப எண்ணற்று உள்ளன. அவற்றையே வேண்டாம் என்று ஒதுக்கும் அளவுக்கு இன்று தமிழன் முன்னேறிவிட்டானே! திருப்பிப் பார்த்துத் திருந்த வேண்டும்.

இன்று தந்தை தாய்ப் பேண், ஊருடன் கூடிவாழ், ஒப்புரவு ஒழுகு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இவை போன்றன தமிழ்க் குழந்தைகள் அறியாதன.

இத்தகைய இளங் குழந்தைகள் (0-6) பயிற்றுவதற்குத் தனித் திறன் தேவை. உயர்ந்த பட்டங்களோ, வேண்டாத பாடங்கள், மொழிகளைப் பயிற்றப் பயிற்சிகளோ தேவை இல்லை. குழந்தைகள் பயிற்சிப்பள்ளி (Nursery Training School) என ஒரு சில தனியார் நடத்துகின்றன. அவையும் தேவையான முறையில்-தெரிந்த வகையில் செயல்படுவதில்லை. பத்தாம் வகுப்பு பயின்றபின் ஆசிரியர் பயிற்சி தானே (Sec Grade) இன்று அடித்தளப் பயிற்சியாக உள்ளது. அதில் பயில்பவர்கள் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையில் ஆசிரியராக இருக்கலாம். அவர்களும் 1, 2 முதலிய வகுப்புகளுக்குச் சொல்லித் தரும் திறன் பெறுவகையில் அவர்கள் பயிற்சி பெறுவதில்லை. பயிற்சிப் பள்ளிகளின் பாடத்திட்டம் முதலில் மாற்றி அமைக்கப்பெறல் வேண்டும்.

இளங் குழந்தைகளுக்குப் பாடம் பயிற்றும் பயிற்சிப் பள்ளிகளைப் பற்றி அரசு கவனம் செலுத்தலாம். பெண் இனத்துக்குப் பெரிதும் உதவ நினைக்கும் இன்றைய அரசாங்கம் ஐந்தாம் வகுப்பு வரை மகளிரையே ஆசிரியராக நியமிக்கப் போவதாகக் கூறியுள்ளது. நல்லதே. ஆனால் குழந்தைகள் வகுப்பிற்கு உரிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி இல்லை. இதை எண்ணிப் பார்க்கவேண்டும் இல்லையானால் அடிப்படை இல்லாத கட்டடம் போன்று உடனே இடிந்து