பக்கம்:கல்வி எனும் கண்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதியோர் கல்வி

113


வரலாம். அவர்களை நேரிய வழியில் ஆற்றுப்புடுத்த வேண்டாமா? அரசாங்கம் இந்த அவலநிலையைப் போக்க ஏதேதோ வழிவகைகளைக் கண்டு கொண்டுதான் வருகிறது. ஆயினும் அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் களையப்பெறல் வேண்டும்.

பெரியோர்களுக்கு என ஓராண்டோ ஈராண்டோ கல்விக் கூடங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பயில வருவோர் குறைந்தது பாதிநாட்களாவது வரின் ஓரளவு எழுத்தறிவு பெற முடியும். ஆனால் அதற்கும் பஞ்சம் என்கின்றனர். ஏதோ மற்றவர் வற்புறுத்தலுக்காகச் சேர்ந்ததாகவும் வேலை வெட்டி அற்றவர் செயல் இது என்றும் நினைக்கின்றவர் இன்றும் பலர் உள்ளனர். இந்த நினைவினை மாற்ற வேண்டும். ஓரளவாவது படித்தாலன்றிச் சமூகத்தில் உயர முடியாது என்ற உண்மை அவர்கள் உள்ளத்தில் உணர வழிவகை காண வேண்டும். உடன் செயலாற்றின் தக்க பயன் விளையும்.

ஒரு காலத்தில் வரிகட்டுபவருக்குத்தான் சட்டசபைத் தேர்தல் வாக்குரிமை என்றிருந்தது. பின் எழுதப் படிக்கத், தெரிந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை உண்டு என்று விதி வகுக்கப்பெற்றது. அக்கால நிகழ்ச்சிகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். கிராமங்களிலும் நகரங்களிலும் எழுத்து வாசனையே அறியாத பலர். எப்படியாவது படிக்க வேண்டும்-கை எழுத்தாவது போட வேண்டும் என்று முயன்று, அதன் வழியே வாக்காளர் ஆகும் தகுதி பெற முயன்றனர். அந்தச் சில ஆண்டுகளில் கணக்கு எடுத்திருந்தால் எழுத்தறிவு இயக்க வளர்ச்சி நன்கு விளக்கும். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அரசாங்க உதவியோ-அட்டிற் சாலைகளோ இலவச நூல் உதவியோ பிறவோ இல்லை. பலர் யாரையாவது அண்டிக் கற்றனர். அந்த நிலை மாறி உரிமை பெற்றபின் எல்லாரும் இந்நாட்டு மன்னராக உயர்ந்து விட்டமையின், படித்தவர் படியாதவர்