பக்கம்:கல்வி எனும் கண்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கல்வி எனும் கண்


வந்திருக்குமாயின் கிராமங்களில் கல்வி கற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ந்திருக்கும். கல்லாதார் இல்லை என்ற நிலையே உருவாகி இருக்கும். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இன்றைய நிலையில் எழுத்தறியார் நிலை பற்றி அரசாங்க வெளியீட்டினையே இங்கே தர நினைக்கின்றேன். நாட்டின் அவலநிலையினையும், மேற்கொண்ட முயற்சிகளையும். செய்ய வேண்டியதாய காலப் பணியினையும் அது விளக்குவதை ஓரளவு காண இயலும். உலகில் உள்ள கல்லாதார் எண்ணிக்கையில் பாதி அளவு நம் நாட்டில்தான் இருக்கும் நிலையை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் வருந்தி வெட்கப்பட வேண்டாமா? எங்கோ ஒருசாரார் முன்னேறி விட்டதாகவும் பெரும்பாலோர் படித்ததாகவும் கூறிக் கொண்டு, ஏழைகள்-கிராம மக்கள்-பெண்கள் இவர்களுள் பெரும்பாலோர் படிக்காதிருக்கும் நிலையினை எண்ணிப், பார்ப்பதில்லை. அதிலும் இன்று நகரங்களில் வளரும் ஆங்கில மோகத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மாக்கள், தம்மைப் போல் இந்திய மகனாக-மகளாக வாழும் எண்ணற்ற மக்களை எண்ணிப் பார்ப்பதில்லை; மாறாக ஏளனம் செய்வர். அரசாங்க முயற்சிகளும் அவ்வளவாகப் பயன் தருவதில்லை. அந்த அரசாங்க அறிக்கையினை இங்கே தருகின்றேன்.

COMMITTEES PERSPECTIVE

7-2-1. The Resolution setting up the committee to review NPE, inter alia, states:

“Despite efforts at social and economic development since attainment of Independence a majority of our people continue to remain deprived or education, which is one of the basic needs for human development. It is also a matter of grave concern that our people comprise 50 per cent of the world's illiterate, and large sections of children have to go without acceptable level of primary