பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71


ஏற்கெனவே தினப்பத்திரிகை நடத்துவதற்காக ஒருவர் வாங்கிப்போட்டிருந்த ரோடரிமிஷின்களைத் தன்னுடைய தினப்பத்திரிகைக்கு எடுத்துக்கொள்வதற்குச் சாதுரியமாக ஏற்பாடும் செய்திருந்தார். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் தொந்தரவு வராமலிருப்பதற்காகத் தம் பத்திரிகையில் அவரையும் ஒரு பங்குதாரர்போல் பெயருக்கும் ஆக்கிவிடத் திட்டமும் போட்டிருந்தார் கமலக்கண்ணன் ‘டெக்ளரேஷன்’ கேட்டு டெல்லியிலிருக்கும் பிரஸ் ரிஜிஸ்டிராருக்கு எழுதிப் போடவேண்டியதுதான் பாக்கி, அப்படி எழுதிப் போடுவதற்கு முன்னால் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்ப தென்று -- விளம்பரத்தைப் பார்த்து --– வந்து குவிந்திருக்கிற பெயர்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெயர் முடிவாகிவிட்டால் டெல்லிக்கும் எழுதிவிடலாம். பின்பு பத்திரிகைகளில் விளம்பரமும் போட்டு ---– ஏஜெண்டுகளை விண்ணப்பிக்கச் சொல்லலாம். பெயரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்றிரவு கிளப்பில் நண்பர்களோடு பேச முடிவு செய்திருந்தார் அவர்.

மாலை நான்கு மணிக்குக் கலைச்செழியன் பேட்டி காண வருவதாகச் சொல்லியிருந்ததனாலும், பேட்டி முடிந்தவுடன் நண்பர்களைக் காண ‘கிளப்’புக்குப் போக வேண்டியிருந்ததனாலும் பகலில் நன்றாக ஒய்வெடுக்க விரும்பினார் அவர் கம்பெனியிலிருந்து பதினொரு மணிக்கு ஃபோன் வந்தது. அவருடைய காரியதரிசி பேசினார். முக்கியமான தபால்களை ஃபேர்னிலேயே படித்தார். ஸ்டெனோவைக் கூப்பிட்டு ஃபோனிலேயே முடிந்த வரை பதில்களைச் சொல்லிவிட்டார் அவர். பகலில் நன்றாகத்துங்கி எழுந்தால்தான் மாலையில் கலைச்செழியன் பிரமுகர் பேட்டிக்காகப் போட்டோ எடுக்க வருகிறபோது ஃபிரஷ் ஆக இருக்குமென்று தோன்றியது அவருக்கு. குளித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாகத் துரங்கினார். மூன்று மணிக்கு அவர் எழுந்திருந்தபோது வேலைக்காரன்.

“சார்! இவரு உங்களைப் பார்க்க வந்திருக்கார். அனுப்பட்டுமா?”– என்றபடி ஒர் அழகிய விஸிட்டிங்கார்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/73&oldid=1047782" இலிருந்து மீள்விக்கப்பட்டது