பக்கம்:சோழர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

33



4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்

1. சிபி

முன்னுரை .

இவன், எல்லாச் சங்கப் புலவராலும் பிற்பட்ட புலவராலும் சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளான்.[குறிப்பு 1] இவன் வரலாறு பாரதம், இராமாயணம் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவன், பருந்திற்கு அஞ்சித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறவினைக் காக்கக் தன் தசையைக் கொடுத்தவன் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.

இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள்

புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலியன இவனைக் குறிக்கின்றன.

     “புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
     சினங்கெழு தானைச் செம்பியன் மருக!”

- புறநானூறு

     “தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
     தபுதி அஞ்சிச் சீரை புக்க
     வரையா ஈகை உரவோன் மருக!”


  1. காவிரி நாட்டைச் சிபிதேசம் என்று தண்டி - தமது தசகுமார சரிதத்தில் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது. தண்டி கி.மு. 7-ஆம் நூற்றாண்டினர்.


சோ. வ. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/35&oldid=1232173" இலிருந்து மீள்விக்கப்பட்டது