பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105

கள் வெளிவந்த பின் தேர்தல் அலுவிலகம் திறப்பதற்கு ஏற்பாடாயிற்று. தேர்தல் பிரச்சாரத்திற்கான பிரசுரங்கள், வாசகங்கள், சுவரொட்டிகள் அச்சிடும் பொறுப்பு புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் விடப்பட்டது. நீர்வளத்திற்கு அடையாளம் கிணறு! நிலவளத்திற்கு அடையாளம் கிணறு! நல்வாழ்வின் சின்னம் நற்கேணியே! ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டுவது கிணறே!

என்றெல்லாம் வாசகங்களை அடுக்கிவரைந்து தள்ளினார் புலவர். பெண் வாக்காளர்களுக்கு ஒரு கவர்ச்சி வேண்டு மென்று கருதித் தேர்தல் அலுவலகத் திறப்புவிழாக் கூட்டத்திற்கு நடிகை மாயாதேவி அழைக்கப்பட்டிருந்தாள். அவளும் கமலக்கண்ணனை ஆதரித்து மேடையில் இரண்டு வார்த்தைகள் பேசினாள்.

பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர் பிரகாசத்தின் யோசனைப்படி நடிகை மாயாதேவியின் படத்துடன்—“உங்கள் ஒட்டு கமலக்கண்ணனுக்கே’’ என்ற மாபெரும் சுவரொட்டி சின்னத்துடன் அச்சிட்டு ஒட்டப்பட்டது. மாயாதேவி மயக்கும் புன்னகையுடன் வளைக்கரங்களால் கிணற்றுச்—சின்னத்திற்கே ஒட்டு போடுவதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சியோடு சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் மின்னின. தினசரி காபி—சிற்றுண்டிச் செல்வுபகல்—இரவு உணவுச் செலவு–வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு இரண்டாயிரம் ரூபாய் வரை ஆயிற்று. தொகுதியில் மொத்தம் ஐந்தாறு பெரிய தேர்தல் அலுவலகங்கள். பத்துப் பன்னிரண்டு சிறிய தேர்தல் அலுவலகங்கள் எல்லாவற்றிலும் ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீசர், வேறு, தற்காலிகமாக அவர்களுக்கு மாதச் சம்பளம் வேறு பேசப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த சோம்பேறிகளை பிரகாசமும், தனக்குத் தெரிந்த சோற்று மாடன்களைக் கலைச்செழியனுமாகக் கமலக்கண்ணனின் தேர்தல் அலுவலகங்களில் பி.ஆர்.ஒக்களாக அமர்த்தி வைத்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/107&oldid=1048370" இலிருந்து மீள்விக்கப்பட்டது