பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

நெஞ்சக்கனல்


பலவழிகளில் பயனடைகிறது. எனவே கூட்டத்தில் யாரும் அவர் மனம் புண்பட நடந்துகொள்ள வேண்டாமென்று. மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்”—என்று தலைவர் முழங்கியபோது–

“அதுதான் கட்சியையே நீங்கள் அவருக்கு விலைபேசி விற்று விட்டீர்களே”—என்று கூப்பாடு போட்டார்கள் கூட்டத்தில் சிலர், தலைவர் நிலை தர்மசங்கடமாகி விட்டது. புகழ், பதவி, செல்வாக்கிற்காகச் சேர்ந்த கட்சியில் முதல் முதலாக ஒர் அவமானம் நிறைந்த கடும் எதிர்ப்பை இப்போதுதான், சந்தித்தார் கமலக்கண்ணன். கூட்டத்தினரோ, ‘நான்சென்ஸ்’ என்ற வார்த்தையை வாபஸ் வாங்காமலோ, மன்னிப்புக் கேட்காமலோ, அவரை அங்கிருந்து வெளியேற விடவே தயாராயில்லை.

9

குடியரசாட்சி, சமஉரிமை, எல்லாருமே ஒர் குலம், எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை— என்றெல்லாம் பழக்கமாகி விட்ட வாசகங்களை நம்பிக்னையில் ஆழம்வரை போக விடாமல்—எதிரே கேட்கிற பாமரர்களுக்காகச் சொல்கிறவர்கள்—கேட்கிறவர்களிடம் அது உண்டாக்குகிற விளைவுகளுக்கேற்பப் பின்பு நடக்கவும் தெரிய வேண்டும். ஆனால் அடுத்தலனுடைய மனச்சாட்சியைக் கிளரச்செய்து–விட்டு அது கிளர்ந்தெழுந்து தனக்கெதிரே வருகிறவேளையில், ‘என்னை எதிர்த்து இப்படிக் கேட்க, இவனுக்கு எவ்வாறு இவ்வளவு துணிவு வந்தது’– என்று வெகுளிப்படுவது தான் சராசரி இந்தியப் பெரிய மனிதனின் ஜனநாயகமாக இன்று இருக்கிறது. பாமரர்கள் செயலளவில் ஜனநாய கத்தைப் புரிந்துகொள்கிற வேளையில் புரியவைத்தவர்கள் வெட்கப்படுகிற நிலையோ, பயப்படுகிற நிலையோ கனிந்த ஜனநாயகம் ஆகாது. உரிமை, அபிப்பிராய சுதந்திரம்—போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எவ்வளவு பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/102&oldid=1048361" இலிருந்து மீள்விக்கப்பட்டது