பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49

அறியமுடியும் என்பது பரராசசிங்கனுக்கு நன்றாகத் தெரியும். அதுவே அவன் கலையுணர்ச்சிக்கு அடிப்படையான கொள்கையுமாகும். புலவருக்கோ மகிழ்ச்சி வெறி பிடித்துவிட்டது. குழந்தையோடு விளையாடும் தாய்போல அரசனோடு கவிதை விளக்கத்தில் ஈடுபட்டார்.

பரிசு பெற வேண்டிய போதும் வந்தது. ஒரு பெரிய யானையையும் அதை வைத்துக் காப்பாற்றுவதற்குரிய பெரிய செல்வத்தையும் கொடுத்தான் பரராசசிங்கன். முதலில் யானையைப் பரிசிலாக அளிக்க இருப்பது அறிந்த புலவர் நடுங்கிப்போனார். “ஒரு வாய்க்குச் சோறு கிடையாமல் திண்டாடும் நான் நால் வாயைக் (நால் வாய் = யானை) கட்டி மேய்க்க முடியுமா?” என்றுதான் அவர் அஞ்சினார். அரசன்மேல் அதே கருத்தமைய ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடல் பழிப்பதுபோலப் பரராசசிங்கனைப் புகழ்கிறது. ‘அப்பாவிப் புலவன் யானையிடம் அகப்பட்டுக் கொண்டு சாகட்டுமே என்று கருதிக் கொடுத்துவிட்டானோ?’ என்ற எண்ணம், அச்சந் தொனிக்க எழுகின்றது பாடலில். “சோறும் துணியும் வேண்டி வந்தால் யானையைக் கொடுத்துத் தொல்லைப் படுத்துவதுதான் அரசருக்கு அழகோ” என்ற கூற்றும் நயமாகப் புகழ்கிறது.

பல்லை விரித்து
இரந்தக்கால் வெண் சோறும்
பழந்துரசும் பாலியாமல்
கொல்ல நினைந்தே
தனது நால் வாயைப்
பரிசென்று கொடுத்தான்
பார்க்குள் தொல்லை எனது
ஒரு வாய்க்கும் நால்வாய்க்கும்
இரை எங்கே துரப்புவேனே.”

இரத்தல் = பணிவாக வேண்டல், தூசு = ஆடை பாலியாமல் = கொடுக்காமல், பார்க்குள் = உலகத்தில், இரை = உணவு, துரப்பல் = தேடுதல்.

உபூ-4