பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் இலக்கியக் கதைகள்

போலும்.” இப்படிப் பேசிக் கொண்டே அவ்விருவரும் கோவிலுக்கு எதிர்த் திசையில் நடந்தனர். புலவருக்கு மின்னலென ஒருயோசனை உதித்தது. ‘இளமையில் புல்லும் விறகும் சுமந்து கஷ்டப்பட்டவனாக இருப்பதனால் இவன் வீட்டிற்குச் சென்றால் நம் குரலுக்கு நிச்சயம் இவன் இரங்கிச்செவி கொடுப்பான்’ என்று எண்ணினார். இப்படி எண்ணியவாறே கோவிலுக்குள் போகலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த அவர் மேளதாளத்தோடு உள்ளே சென்ற கூட்டம் திரும்பி வருவதைக் கண்டார். பிறர் சந்தேகம் கொள்ளாதபடி அவரும் கூட்டத்தைப் பின்பற்றிச் சென்றார். இரண்டு மூன்று தெருக்கள் கடந்தபின் அரண்மனைபோல் பெரிதாகச் சிறந்து விளங்கிய ஒரு வீட்டிற்குள் புகுந்தது கூட்டம். கோவிலிலிருந்து வந்த அவசரத்தில் உடனே தாமும் உள்ளே போய்த் தம் குறையைச் சொல்லுவது நன்றாக இராது என்று கருதியவராய் வீட்டெதிரே இருந்த மரத்தடியில் அரை நாழிகை தாமதித்தார் புலவர்.

வீட்டில் ஒரு வழியாக ஆரவாரம் குறைந்து அமைதி யுற்றதுபோல் தென்பட்டபோது. கவிராயர் மெல்ல தாமும் உள்ளே நுழைந்தார். நடையைக் கடந்து கூடத்திற்குள் நுழைய இருந்த அவரைப் பக்கத்திலிருந்து வந்த அதட்டும் குரல் அப்படியே நிறுத்தியது. புலவர் திரும்பிப் பார்த்தார். நடையோரமாகச் சாய்வு மெத்தையில் அதே செல்வர் சாய்ந்து கொண்டிருந்தார்! “யாரையா நீர்?” என்ற அந்த இடிக்குரலுக்குப் பதில் சொல்லாமல் கிட்ட நெருங்கிப் பவ்யமாகத் தம் நிலையைச் சொல்லி, அந்தச் செல்வரைப்போற்றி இரண்டொரு பாடல்களையும் பாடினார் புலவர். சாய்ந்து கொண்டிருந்த செல்வரின் முகத்திலோ நொடிக்கு நொடி: கடுமை வளர்ந்து வந்தது. புலவருக்குப் பெருத்த ஏமாற்றம். திட்டாத குறையாக அவரை வாசல் வரை கொண்டுவந்து விட்டபின் திட்டி வாசலின் கதவை இழுத்துச் சாத்திக் கொண்டுபோனான் அந்தச் சீமான்.

புல்லுக்கட்டும் விற்கும் சுமந்த பேர்
பூர்வகாலத்துப் புண்ணிய வசத்தினால்