பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழ் இலக்கியக் கதைகள்

பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்திற் கம்மா இராமை யினால் ஐயோ!'
பருந்தெடுத்துப் போகின்றதேப் பார்!”

பெருமாள் = வரதராஜர், இருந்திடம் = இருக்குமிடம் ஆகிய கோவில், பருந்து = கருடன்.

இதே மாதிரி எத்தனையோ சிறு அனுபவங்கள் காளமேகத்தின் வாழ்க்கையில் நிறைந்துள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு அனுபவக் காவியம் என்ற முறையில் அவற்றை இரசிக்க முற்பட்டுவிட்டால் தவறாக எண்ணத் தோன்றாது. அந்த அளவு இரசிக்கும் இரசனையே நமக்குப் போதுமானது.

37. குடத்திலே கங்கை!

பிறரை வலியச் சொற்போருக்கு இழுத்து வாதமிட வேண்டும் என்ற ஆசை காளமேகத்திற்குக் கிடையாது. ஆனால் பிறராகத் தம்மை அவ்வாறு ‘வம்புக்கு இழுக்கும் போது” மண்ணாந்தை மாதிரிச் சும்மா இருந்து விடுவதும் அவருக்குப் பிடிக்காது. மற்றவர்கள் திறமையைப் பரிசோதிக்கவேண்டும் என்ற ஆர்வமோ, அவர்கள் படிப்பின் ஏற்றத்தாழ்வை ஆராய்ந்தறிய வேண்டும் என்று துடிதுடிக்கும் புலமைக் காய்ச்சலோ அவருக்கு இருந்ததில்லை. ஆயினும் பொறாமையும் எதிரியைப் படிக்காதவன் என்று பலரறிய மட்டந்தட்டிக் காட்ட வேண்டுமென்ற அசூயையும் கொண்ட வேறு சில புலவர்கள் அவரையே அப்படிப் பரிசோதிக்க வந்தபோது அவர் விட்டுக் கொடுத்து ஒதுங்கி விடுவதும் இல்லை.

இந்த விஷயத்தில் அவரிடம் சிக்கிக் கொண்ட மற்றவர்கள் நிலை, நேர் எதிரே இருக்கும் கற் சுவரை நோக்கிப் பந்தை எறிபவன், எறிந்த வேகத்தில் அதே பந்து மீண்டும் வந்து