பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105

அவர் வேண்டிக் கொண்ட விதம், கருப்பண்ண வள்ளலையும் அவர் தம்பியரையும் உருக்கம் கொள்ளச் செய்தது. அந்த நிலையில் காலில் முள்ளை எடுத்துச் சொஸ்தமாக்காமல் அவரை அனுப்புவது சரியில்லை என்றாலும் அவரது வேண்டுகோளை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. நோயாளியாக இருக்கும் மனைவியைப் பார்க்கும் பரபரப்பும் ஆவலும் புலவருக்கு இருக்கும்போது அவர் விருப்பப்படி அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி அனுப்பி விடுவதே நல்லது என்று அவர்களுக்கும் தோன்றியது. கருப்பண்ண வள்ளல் வீட்டில், ஒருவர் தாராளமாக அமர்ந்து கொண்டு போகும்படியான மூடு பல்லக்கு ஒன்று இருந்தது. அதில் புலவருக்கு அளிக்க வேண்டிய பரிசிற் பொருள்களை எல்லாம் வைத்து அவரையும் ஏறிக்கொள்ளச் செய்து அனுப்பி விடலாம் என்று சகோதரர்கள் தீர்மானித்தார்கள். ஆனால் அந்தப் பல்லக்கைச் சுமந்து செல்வதற்கு இரண்டு ஆட்களும் இடையிடையே தோள் மாற்றிக்கொள்ள இரண்டு ஆட்களம் வேண்டும். சமீப காலமாக அது உபயோகத்தில் இல்லாமல் இருந்ததனால் அத்தப் பல்லக்கைத் துக்குவதற்கென்று நியமிக்கப் பெற்றிருந்தவர்களையும் விலக்கி அனுப்பி விட்டிருந்தார்கள். புலவருடைய பதைபதைப்பையும் அவசரத்தையும் பார்த்தால், அங்கே இங்கே ஒடிப் பல்லக்குத் துக்குவதற்கு ஆள் திரட்டிவிடலாம்’ என்பதற்குக் கூட அவகாசம் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்தியரை அழைத்து வரச் சென்ற ஆளும் இன்னும் திரும்ப வில்லை. ஊரிலிருந்து புலவருக்குச் செய்தி கொண்டு வந்த ஆள் நடுவே விடைபெற்றுக் கொண்டு தன் காரியமாகச் சென்றுவிட்டான். புலவரின் ஊர் செல்ல வேண்டும் என்ற தவிப்போ, கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வள்ளலும் சகோதரர்களும் என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்து மயங்கினார்கள்

திடீரென்று கருப்பண்ண வள்ளலுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் தம் தம்பியர்களைச் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று அவர்களிடம் தனியாக