பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

147

தன் பெருமை தாழும்போது எதையும் தூக்கியெறிந்து பேசிவிட்டு நிமிர்ந்து நடக்கும் இத்தகைய நிலை ஒவ்வொரு அறிவாளியின் வாழ்விலும் ஒரு கணமாவது வந்துபோகும் நிகழ்ச்சிதான்.

50. திருமண விருந்து

புங்கனூர் முழுவதும் அந்தத் திருமணத்தின் சிறப்பைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரிலேயே பெரிய செல்வர் வீட்டுத் திருமணம் அது. புங்கனூர்க் கிழவன் என்றால் அந்தச் சுற்றுப்புறத்து ஊர்களில் ஈடில்லாத செல்வாக்கு இருந்தது. செல்வமும் செல்வாக்கும் ஒருங்கே பெற்ற ஒருவர் வீட்டில் நடைபெறும் திருமணம் எவ்வளவு பிரமாதமாக நடக்குமோ, அவ்வளவு பிரமாதம் புங்கனூர்க் கிழவன் வீட்டுத்திருமணத்திலும் இருந்தது.

வீட்டு வாயிலில் தெருவையெல்லாம் அடைத்தாற்போல் பெரிய பந்தல். வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள், உட்காரத் துய்மையாகப் புதுமணல் தூவிய தரை, புதுப் பாய்கள் விரித்த திண்ணை. எல்லா ஏற்பாடுகளும், நண்பர்களும் பழகினவர்களுமாகத் திருமண வீட்டில் ஒரே அமர்க்கள மாயிருந்தன. இரட்டை மேளம், இரட்டை நாகசுரம் இன்னொலி பரப்பிக் கொண்டிருந்தன. உறவினர் கூட்டம் திருவிழா போலக் கூடியிருந்தது. வந்தோர்க்கெல்லாம். வரையாமல் வழங்கும் வள்ளலாகையால் திருமண விருந்தை உண்பதற்குப் பந்தலிலும் திண்ணையிலுமாகப் பெருங்கூட்டம் காத்திருந்தது.

திண்ணையில் விரித்திருந்த பாயில் உட்கார்ந்திருந்தவர் களில் ஒர் ஏழைப் புலவரும் இருந்தார். அவர் திருமணத்துக்கு வந்திருந்தாலும் யாரும் கவனிப்பாரின்றிப் பசியோடு இருந்தார்.எல்லோரும்தான் பசியோடு இருந்தார்கள்.ஆனால் புலவருக்கு எல்லோரைக் காட்டிலும் அதிகமான பசி. காலையில் எதுவும் உண்ணாமல் வந்திருந்தார். பார்த்த அளவிலேயே புலவர் என்று