பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63

நீலக்கல்லிற் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக்கால்
தூறிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ
மலையச் சாரலில் வாழ் பெரியம்மையே"

தூறி = ஆத்திரமடைந்து, மலையம் = பொதியமலை,: மல்லுக்கட்டும் = சண்டையிடும்.

தம் பாவத்தை இப்படி நொந்தவாறே பெரியம்மை கோவிலை நோக்கி மீண்டும் அந்தப் புலவர் நடந்து கொண்டிருந்தார்.

25. தடை மோதிரம்

“திறமை, புலமை இவைகளை உண்மையாகவே பாராட்டி ஊக்குவிக்கும் வள்ளல்களைக் கதைகளிலும் காவியங்களிலும் தான் பார்க்கமுடியும் போலும். வாழ்க்கையில் அத்தகைய மனிதர்கள் இருப்பதாக எண்ணுவதோ, நம்புவதோ கானல் நீரைத் தண்ணிர் என்று கருதிக் குடிக்க ஆசை கொள்ளுவது போன்றது தான். பொருள் செறிந்த பாடல் அற்புதமாக அமைந்துவிட்டது. இதை அந்த வள்ளலிடம் பாடிக் காட்டினோமானால் அவர் வாரி வழங்குவது நிச்சயம் என்றெல்லாம் ஆர்வமும் நம்பிக்கையும் தூண்டச் சுவடியைத் துரக்கிக்கொண்டு போனால், ‘பாட்டா? தமிழிலா? அது என்ன அது? ஏதாவது புது மோடி வித்தையா? இதுவரை நான் பார்த்ததில்லையே?’ என்று, இதுபோல அறியாமையை வெளிப்படுத்தும் மனிதர்களைக் காண முடிகின்றதே அன்றிக் கவிதை அறிவும், கலை உணர்ச்சியும், கொடுக்கும் இயல்பும் ஒருங்கே அமைந்த வள்ளல் ஒருவனையேனும் காண முடிவதில்லை. இந்த மூன்றும் ஒருங்கே அமைந்த உள்ளம் எங்காவது அத்தி பூத்தாற்போல அகப்பட்டால்