பக்கம்:வேமனர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல்களின் ஆய்வடங்களிலிருந்து இந்த மேற்கோளைக் கண்டறியும் முயற்சியில் ஒரு வாரம் வீணாகக் கழிந்தது. இந்த ஆய்வடங்கலில் பொருளடைவு (index) அமைக்கப் பெறாததன் காரணமாக இத்தகைய நீண்டதொரு தேடுதலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அதன் பிறகு கல்கத்தா நகரிலுள்ள தேசிய நூலகம், அதே நரிலுள்ள ஆசியாக் கழகம், இவை போன்ற பிற நிறுவனங்களுடன் தகவல் ஆய்வினை மேற்கொண்டேன்; அவ்விடங்களிலிருந்து தாமதமின்றிக் கிடைத்த மறுமொழிகள் சர் வில்லியம்ஸின் மேற்கோள் வியாசரைப் பற்றியதேயன்றி வேமனரைப்பற்றியதன்று என்று புலனாக்கின.

இங்ஙனமாக வேமனரைப் பற்றிய தெலுங்கு நூல்களின் தரம் மிகக் குறைவாகவே உள்ளது. திரு. இராள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மாவின் "வேமனரைப் பற்றிய சொற்பொழிவுகள்" என்ற நூல் ஒன்றே இதற்கு விலக்காகும். ஆனால், இந்த நூல் முதன் முதலாக நாற்பது ஆண்டுகட்கு முன்னர் வெளியிடப் பெற்றது; அதிலிருந்து புதிதாகவோ அல்லது தகுதியானதாகவோ ஒன்றும் வெளிவரவில்லை, வேமனரைப்பற்றி ஆங்கிலத்திலுள்ள தகவல்கள் சாதாரணமாக நன்றாகவே உள்ளன என்று கூறலாம்; ஆனால் அவற்றின் பெரும்பகுதி எளிதாசுக் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எதித்துக்காட்டாக, டாக்டர் சி. ஆர். ரெட்டி அவர்களின் வேமனரைப்பற்றிய வானொலிப் பேச்சு நாடாப் பதிவாகத்தான் கிடைக்கின்றது. சென்னை வானொலியில் பணியாற்றும் என்னுடைய நண்பர் திரு. தாசரதியின் அன்பு நிறைந்த உதவி இல்லாவிடில், அதன் தட்டச்சுப் படியை என்னால் பெற்றிருக்க முடியாது.

வேமனரைப் பற்றிய பொருளைத் திரட்டிய பிறகு, மிகவும் வெறுக்கத்தக்க முறையிலமைந்த பொருத்தமில்லாத செய்திகளின் அடவியினூடே முன்னேற்றம் காண்பதென்பது அருமுயற்சியுடன் கூடிய உழைப்பாக இருந்தது. வேமனருடைய வாழ்க்கை வரலாற்றைப் பொருத்தமட்டிலும் திட்டவட்டமாக ஒன்றும் அறியக்கூடவில்லை. அல்லது அறியவும் முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டாக வேண்டும், அவரைப்பற்றிய பல செய்திகளும் வாதத்திற்கிடமாகவே உள்ளன. அவருடைய அடுக்கிசையும்கூட (விஸ்வ தாபீராமா -வினுர-வேமா) வாதத்திற்கிடமாக உள்ளது. இந்த உலகில் மகிழ்வுடனிருக்கும் வேமா, கேட்பாயாக என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப் பெற்ற பொருளாக இருப்பினும் இருபதற்கு மேற்பட்ட புலவர்கள் தம்முடைய முன்சார்புநிலைக்கட்கேற்ப, அச்சொற்றொடரை பிரித்துத் தமக்கு வேண்டிய பொருளைக் கூறவே விரும்புகின்றனர். என்னால் இயன்றவரை, அறியப்படும் பொருள் சார்ந்தும் நடுநிலையாக இருக்கவும் முயன்றுள்ளேன்; நான் அப்படியும் இப்படியும் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/9&oldid=1241827" இலிருந்து மீள்விக்கப்பட்டது