பக்கம்:வேமனர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடர்ப்பாடான நிலையில் மந்திர நீர்மமாகிய புருடவேதியும் தீர்ந்து விட்டதால் தம் அண்ணனைப்போல் அதனைப் பயன்படுத்தவும் வழி இல்லை என்ற போதிலும் அவருக்கு எதிர்பாராத நற்பேறு ஏற்படச் செய்தது.

மாயமந்திரக் கலைகளில் வல்லுநரான யோகி ஒருவர் தனிமையான ஓரிடத்தில் பலியொன்றினைத் தொடங்கினர். அது வெற்றியுடன் நிறைவேறுவதற்குப் பலியாளாக ஒருமனிதர் தேவைப்பட்டார். ஆகவே, அவர் ஏராளமான செல்வம் தருவதாக வாக்களித்து ஓர் ஏழை ஆட்டிடையனை மயக்கி ஏமாற்றி அவனைப் பலிக்குழி உள்ள இடத்திற்கு இட்டுச்சென்று அவனைச் சீறியெழும் தீச்சுவாலையினுள் தள்ளுவதற்கு முனைந்தார். இருவரிடையேயும், நிகழ்ந்த பூசலில் ஆட்டிடையன் தப்பிப்போக யோகி தவறி அக்கினி குண்டத்தில் வீழ்ந்து சாம்பலானர். அடுத்தநாள் அதிகாலையில் விடுப்பார்வத்தால் தூண்டப்பெற்ற ஆட்டிடையன் தன் மயிரிழையில் உயிர் தப்பிய இடத்திற்குத் திரும்பிவந்தான், பலிக்குழியில் ஆள் உயரத்தில் இரண்டு பொற்சிலைகள் இருப்பதைக் கண்டான். அவனால் அதனை நம்பக்கூட முடியவில்லை. இரவு வரும்வரையிலும் அவன் பொறுமையின்றிக் காத்திருந்தான். இருள்சூழ்ந்து அமைதி நிலவியதும் தன் துணைவியையும் மக்களையும் அவ்விடத்திற்கு இட்டுச்சென்று இரண்டு சிலைகளையும் தன் குடிசைக்கு நகர்த்திச்சென்றான். அந்தச் சிலைகளினின்றும் சிறுசிறு துண்டுளைநறுக்கி விற்றுத் தன் ஆட்டு மந்தையைப் பெருக்கியும் பிற வழிகளிலும் தன்னைச்செல்வந்தனுக்கிக்கொண்டான். முன்பில்லாத திடீரென்று காணப்பெற்ற ஆட்டிடையனின் செல்வ வளத்தின் அறிகுறிகளைப் பற்றிய செய்தி அனவோத்த வேமரின் செவிகளுக்கு எட்டவே, அவர் தம் ஆட்களை அனுப்பி ஆட்டிடையரின் குடிசையைச் சோதிக்கச்செய்தார். அவர்கள் பொற்சிலைகளைக் கண்டு அவற்றைக் கைப்பற்றினர். அதிலிருந்து அனவோத்த வேமரின் பணத்தட்டுப்பாடு பற்றிய கவலைகட்கும் ஒருமுடிவு ஏற்பட்டது.

மிகுபுகழ் வாய்ந்த முப்பது ஆண்டு ஆட்சிக்குப்பிறகு அனவோத்த வேமரும் கி.பி. 1370-இல் விண்ணாடு புக்கார். அவருடைய மகன் குமரகிரி வேமர் அந்தச் சமயத்தில் இருபத்தொரு வயது நிறையாத சிறுவராக இருந்தார். ஆகவே, அரசரின் தம்பி அனவேமர் என்பவர் பன்னிரெண்டு ஆண்டுகள் அரசாட்சி புரிந்தார். அதற்குப்பிறகு குமரகிரி வேமர் அரியணை ஏறினர். அவருடைய சிறப்பான புகழ் எல்லாம் அவர் கவிஞர் வேமனர் என்பவரின் திருத் தந்தையார் என்பதே. மல்லம்மா என்ற அரசிமூலம் பெற்ற மூன்று ஆண் மக்களுள் வேமனரே மூன்றாவது கடைசி மகன். ஏனையோர் அனவோத்த வேமர் II அல்லது பெதகோமட்டி வேமரும் இராச்ச

23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/30&oldid=1243350" இலிருந்து மீள்விக்கப்பட்டது