பக்கம்:வேமனர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமட்டி வேமர் வேகமான பாய்ச்சலுடன் திரும்பினார். தன்னுடைய மதிப்புமிகுந்த இரண்டு குடங்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் வெறிகொண்ட நிலையில் உக்கிரமான தீச்சுவாலையில் குதித்தார்; தீயில் மாண்டார்.

அலியாரெட்டி விழிப்பும் திறமையும் உடையவராதலின், திடீரென்று ஒரு செல்வந்தராகக் காட்சி அளிக்க விரும்பவில்லை. பகுத்துணர்சினந்தையராய் அவர் புருடவேதியைக் கால இடைவெளி விட்டுப் பயன்படுத்தினார். நாளடைவில் பல வீடுகளையும், பல பண்ணைகளையும், பல மந்தைக் கால்நடைகளையும் சேர்த்தார். ஆனால், அவருடைய செல்வச் செழிப்புடன் துக்கங்களும் அவரிடம் குவிந்தன. கோமட்டி வேமர் பழி வாங்கும் பேயாக மாறித் தொடர்ந்து அஞ்சத்தக்க பேரிழப்புக்களை அவர் அடையுமாறு செய்தார். அவருடைய மக்கள் ஒருவர் மாற்றி ஒருவராக நோயுற்று இறந்தனர். அலியாரெட்டியோ பயங்கரமான ஆறாத் துயரில் ஆழ்ந்தார். புரோலயா என்ற ஒரேஒரு மகன்தான் எஞ்சியிருந்தான். அவனும் இறந்துவிடின் குடும்பச் சொத்தினை மரபுரிமையாகப் பெறுவதற்கோ அல்லது அக்குடும்பத்தின் தென்புலத்தாருக்கு எள்ளும் நீரும் இறைத்துக் கடன்கழிக்கவோ ஒருவரும் இலர். தம்முடைய அச்சத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவோ அல்லது அதன் மூலகாரணத்தை வெளியிடவோ முடியாத நிலையில் அவருடைய கடுந்துயரத்தின் பளுதாங்க முடியாத நிலையிலிருந்தது.

மிக அண்மையில் தன்னுடைய ஊழித் தீர்ப்பின் வெடிப் பொலியைத் தான் கேட்கக்கூடும் என்று அஞ்சிய நிலையில் அலியா ரெட்டி ஓரிரவு உறங்கச் சென்றார். அவருக்கோ அமைதியான உறக்கம் பிடிக்கவில்லை. அந்த உறக்கத்தில் அவர் கனவொன்று கண்டார். அந்தக் கனவில் கோமட்டி வேமர் அச்சுறுத்தும் நிலையில் தோன்றினார். அலியா ரெட்டி அவருடைய கால்மலர்களில் திடீரென்று வீழ்ந்து, கண்ணீர் ஆறாகப் பெருகும் நிலையில் அவருடைய மன்னிப்பை இறைஞ்சினர். "நான் உங்கள் மனக்குறையை ஆற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று முறையிட்டார். கோமட்டி வேமர் இறுதியில் ஒருவாறு இரக்கப்பட்டுத் தம்முடைய மன்னிப்புக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். முதலாவதாக, அலியாரெட்டி கோமட்டி வேமரின் தங்கச்சிலையொன்று நிறுவி அதனை நாடோறும் தன்னுடைய குலத்தெய்வமாக வழிபடல்வேண்டும்; இரண்டாவதாக, அன்றும் எதிர்காலத்திலும் அவர் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்பாலாரும் கோமட்டி வேமர் என்ற பெயரினைத் தாங்கியிருத்தல் வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் யாதொரு குறையுமின்றிக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் அலியாரெட்டியின் குடும்

2

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/28&oldid=1244244" இலிருந்து மீள்விக்கப்பட்டது