பக்கம்:வேமனர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. மந்தமான உறுதியற்ற விளக்குகள்

இன்று இருள் மந்தமான உறுதியற்ற விளக்குகளால்
ஒளி கொடுக்கப்பெறுகின்றன

-ஏ. ஜி. கார்டினர்

ம்முடைய வெறுமையை மறைப்பதற்காகவே கட்டுக் கதைகள் வரலாறு என்ற முகமூடியைத் தரித்துக்கொள்ளுகின்றன. ஆயினும் அந்த முகமூடி மிக மெல்லியதாக இருப்பதால் வெறுமை தெளிவாகவே புலனாகின்றது. வேமனரைப் பற்றிய கட்டுக்கதைகள் யாவும் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. அவை பெருமையாக ஆண்டுக் கணக்குகளைக் காட்டுகின்றன; அவை அரசு மரபுடன் தம்மை இணைத்துக்கொள்ளுகின்றன. எனினும், அவை ஒருகணநேரமாயினும் திறந்தெரிந்து ஆய்தலுக்கு முன்னர் நிற்கமுடிகின்றதில்லை.

'வேமர்' அல்லது 'வேமனர்' என்ற பெயர் இன்று வரையிலும் ரெட்டி வகுப்பினரிடையே நிலவும் சாதாரணப் பெயர் அல்ல. ஒரு நூற்றண்டுக்காலம் ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை அடுத்த பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த ரெட்டி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாவரும் 'வேமர்களே'. அங்ங்னமே, நம் கவிஞரும் அப்பெயரால் வழங்கி வரலாயினர். ஆதலின், இக்கவிஞரும் அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவராகவே இருத்தல் வேண்டும். அவர் அங்கனம் இராவிடினும், அந்தக் குடும்பத்துடன் தன்னை இணைத் துக்கொண்டதனாலேயே நேரடியாகவே அரச மதிப்பு நிலையை வழங்கி இருத்தல் வெண்டும். கவிஞருடைய பெயர் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களின் பெயரைப்போலவே இருத்தல் நம்பக் கூடியதான தோற்றத்தையும் வரலாற்றுத் தன்மையையும் கொண்டு இணைப்பிற்குத் துணையாக உள்ளது. மேலும், சில ரெட்டி அரசர்கள் கவிஞர்களாகவும், புலவர்களாகவும் உரையாசிரியர்களாகவும் திகழ்ந்த செய்தி இந்த இணைப்பை உருக்குபோன்ற உறுதியான இணைப்புத் தோற்றத்தையும் அளித்துவிடுகின்றது.

ஆனால் 'கோமட்டி' என்ற பெயரடை எங்ஙணம் ரெட்டி அரசர்களில் ஒருவருடைய பெயரின் ஒரு பகுதியாக அமைந்தது?

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/35&oldid=1243355" இலிருந்து மீள்விக்கப்பட்டது