பக்கம்:வேமனர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாமல் நடுநிலையைப் பேணுவதில் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளேன் என்று மதிப்பிடுவதை என் வாசகர்கட்கே விட்டுவிடுகின்றேன்.

நான் ஏற்கெனவே திரு. தாசரதி அவர்களின் உதவியை ஒப்புக்கொண்டுள்ளேன். இந்தத் தனிக்கட்டுரைக்காகப் பொருளைத் திரட்டுவதில் பலர் எனக்கு உதவி அளித்துள்ளனர். இதில் சிறப்பாகச் சென்னையைச் சேர்ந்த வாணி என்ற ஏட்டின் துணை ஆசிரியர் திரு. டி. ஆஞ்சனேயலு, அமெரிக்கச் செய்தித் துறையைச் சார்ந்த திரு. பி. எஸ். ஆர். கிருஷ்ணா, ஃபிரீடம் பிரளின் உரிமையாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோருக்கும், நூஸ்வீட்டைச் சேர்ந்த திரு. எம். ஆர். அப்பாராவ் (எம்.எல்.ஏ) அவர்கட்கும், வேடபாளையத்தைச் சார்ந்த திரு. ஏ. சீநிவாசராவ், சாரஸ்வத நிகேதனம் ஆகியோருக்கும், ஐதராபாத் பேராசிரியர் என். வேங்கட்டராவ் அவர்கட்கும், கண்டசாலாவைச் சார்ந்த பண்டிதர் ஜி. வி. சுப்பையா அவர்கட்கும் என் நன்றியைத் சொல்லிக் கொண்டாக வேண்டும்.

வேமனரைப் பற்றிய வில்லியம் ஹோவார்டு கேம்டெல்லின் கட்டுரையின் தட்டச்சுப்படியை எனக்காகப் பெற்றுத் தந்ததுடன் திரு. டி. ஆஞ்சனேயலு அவர்கள் முதல் நான்கு இயல்கட்குரிய கையெழுத்துப்படியை முழுதும் நோக்கிப் பயன்படத்தக்க சில கருத்தேற்றங்களையும் தெரிவித்தார். இத்தகைய ஒரு கடப்பாட்டிற்கு என்னை உட்படுத்திய மற்றவர்களுள் திருப்பதியைச் சார்ந்த திரு. இராள்ளபல்லி அதந்த கிருஷ்ண சர்மா, திரு. ஏ. ஜானகிராம் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். விஜயவாடாவில் 'ஆந்திர ஜோதி' அலுவலகத்தில் பணிபுரியும் என் நண்பரும் கூட்டாளியுமான திரு. என். இராமச்சந்திர ராவ் ஒவ்வொரு நிலையிலும் என்னுடைய பணியில் உதவி புரிந்தார். அங்கனமே 'ஆந்திர ஜோதி'யைச் சார்ந்த திரு. எம். வி. சுப்பராவ் அவர்களும் உதவி அளித்தார். இவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

இறுதியாக, என்னுடைய கடப்பாட்டினை வேமனருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக உள்ளேன். அவருடைய அருளால் ஊக்குவிக்கப்பெற்று, திறமைமிக்க அவருடைய கைத் திறனால் முழுநிறைவினை எட்டிய ஆட்டவெலதி யாப்பில் இது காறும் கிட்டத்தட்ட அறுநூறு பாடல்களை எழுதியுள்ளேன். இந்தத் தனிக்கட்டுரையின் மூலம், நான் அவருக்குப் பட்டிருக்கும் கடப்பாட்டில் மிகச்சிறிய பங்கினைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

—வி. ஆர். நார்லா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/10&oldid=1241829" இலிருந்து மீள்விக்கப்பட்டது