பக்கம்:வேமனர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஓய்வுநேரங்களில் நான் அவற்றைப் பயின்று மொழிபெயர்க்கவும் முடிந்தது. எழுத்துப்பிழை, யாப்புப் பிழை, பொருட் பிழை முதலிய பல்வேறு பிழை மலிந்த சருக்கங்களாகக் கிடந்தன. அவைகள்; எந்த இரண்டு படிகளும் ஒன்றுபோல் ஒழுங்குபடுத்தி அமைந்த முறையினைப் பின்பற்றவில்லை; அவை விரிந்த நிலையில் இரண்டிலிருந்து எண்ணூறு திட்ப உரைகளில் வேறுபட்டிருந்தன. நான் மசூலிப்பட்டினத்தில் தங்கி இருந்தபொழுது அப்பகுதியில் கிடைத்த சில படிகளைச் சேகரித்த பிறகு படிப்படியாக விசாகப்பட்டினம், நெல்லூர், குண்டுர், கடப்பை, சென்னை ஆகிய இடங்களிலிருந்தும் பிற படிகளைப் பெற்றுச் சேர்த்தேன். பின்னர் ஓர் அட்டவணையைத் தயாரிக்கச் செய்தேன். அதில் ஒன்பது பத்திகளில் பல்வேறு இடங்களில் கிடைத்த பாடல்கள் அவை கிடைத்த இடங்களைக் காட்டின; இங்ஙனம் அப்பாடல்களை நான் ஒத்துப்பார்க்க வழியமைத்துக்கொண்டேன். நான் கண்ட பாடல்களின் தொகை கிட்டத்தட்ட 2500 ஆகும். எனினும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததில் அவற்றின் தொகை 2000க்குச் சிறிது அதிகமாக இருந்ததைக் காட்டியது.

அதன்பிறகு அப்பாடல்கள் ஒரு திட்டமான ஒழுங்கில் அமைப்பது இன்றியமையாததாயிற்று. பெயர்த்தெழுதுவோர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு தேர்ந்தெடுத்துக்கொண்டனரென்பது தெளிவு; எந்த இடத்திலும் எவ்வித ஒழுங்கும் மேற்கொள்ளப்பெறவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு நான் முழுவதையும் இணைவிளக்கப் பொருத்தமானபடி சமயம், நீதி, அங்கதம், மறைமெய்ம்மை, பல்வகை என்ற ஐந்து தலைப்புக்களில் அமைத்துக்கொண்டேன்.

டாக்டர் ஜி.யு. போப்பும், மேஜர் ஆர். எம். மாக்டனால்டும் வேமனரை வியந்து போற்றிய அடுத்த இரண்டு ஐரோப்பியர்களாவர். முன்னதாகக் குறிப்பிட்டவர் மடாதிபதி டூபாயின் “இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள்" என்ற நூலின் தனது பதிப்பில் 'வேமனரின் செய்யுளியற்றும் போக்கிலுள்ள இனிமையையும் சந்த நயத்தையும் எதுவும் விஞ்ச முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்க் குறிப்பிட்டவரின் கருத்துப்படி, 'தெலுங்கு இலக்கியப் பரப்பு முழுவதை நோக்கினால் வேமனரது எழுத்துக்கள் ஐரோப்பியர்களின் கவனத்தைக் கவர்ந்தது போல் வேறு எந்த நூலாசிரியரின் எழுத்துக்களும் கவர்ந்ததில்லை’ என்பதாகும்.

இரண்டாவதாக வேமனரை மொழி பெயர்த்த ஆங்கில மொழி பெயர்ப்பாளரும் ஒரு சார்லஸ் என்பவரே; அவர் பெயர் சார்லஸ் இ. கோவர் என்பது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர்

13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/20&oldid=1242415" இலிருந்து மீள்விக்கப்பட்டது