பக்கம்:வேமனர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தும் அதனை ஒன்றாக இணைத்துக்காணலாம். நம்முடைய கண்களை அகட்டியும், மனத்தை விழிப்பாகவும் வைத்துக்கொண்டு வரிகளுக்கிடையிலும் கருத்தினைக் காணும் நோக்குடன் இருத்தல் வேண்டும். இதனை மட்டிலும் நாம் மேற்கொண்டால் தம்மை உணர்த்திக் காட்டும் பெருங்கவிஞர்களுள் இவரும் ஒருவர் என்பதைக் கண்டறியலாம். தம்முடைய பாடல்களின் வாயிலாகத் தம்மைக் காட்டும் பொழுது வேமனர் ஓர் அரச குடும்பத்தின்வழி வந்தவரல்லர் என்பது புலனாகும். அவருடைய வாழ்க்கையின் பின்னணியில் தெளிவற்றுத் தோன்றுவது அரண்மனை அன்று என்பதையும் ஆனால் அது ஒரு பண்ணையேயாகும் என்பதையும் அறியலாம். அதுவும் ஒரு பெரிய பண்ணை அன்று என்பதையும், ஆனால் ஒரு குடும்பத்தை நேர்மையான வாழ்க்கை நலத்துடன் வைக்கக்கூடிய அளவுக்குப் பெரிது என்பதையும் தெளியலாம். சற்றே ஒரு சிறிது கவனக்குறைவான பள்ளி வாழ்விற்குப் பிறகு வேமனர் பண்ணை அலுவல்களில் தம் தந்தையாருக்குத் துணைபுரியத் தொடங்குகின்றார். ஒவ்வொரு நாள் காலையிலும் தம்முடைய பசுக்களையும் எருமைகளையும் புல்வெளிக்கு ஓட்டிச் செல்வார்; மாலையில் அவற்றைத் திருப்பி ஓட்டிவருவார். ஏர்பிடிப்பதிலும், விதைப்பதிலும், களை நீக்குவதிலும் அவர் கைகொடுத்து உதவுவார். உயர்நிலையில் உட்காரும் இடத்தில் கையில் கவணுடன் நின்றுகொண்டு முற்றிவரும் கதிர்களைச் சூழும் பறவைகளை வெரட்டுவார். அறுவடையிலும் சூடடிப்பதிலும் மணிகளைத்தூற்றிப் பிரிப்பதிலும் அவர் உதவுவார். பருவ விளைபொருள்களை வீட்டிற்கு ஏற்றிவரும் மாட்டு வண்டியில் வண்டியோட்டி அமரும் இடத்தில் பெருமிதத்துடன் அமர்ந்துகொள்வார். தனக்கிடப்பெறும் பணி எதுவாக இருப்பினும் அதனை மகிழ்ச்சியுடன் செய்வார். பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது பாடுவார். நாட்டுப் பாடல்களில் மேம்பட்டுத் திகழ்வார். திறந்த வெளி நாடகத்தையோ பாவைக்கூத்தையோ பார்ப்பதையும் ஊர்த்திருக்கோயிலில் நடைபெறும் இராமாயண -மகாபாரத சொற்பொழிவுகளைக் கேட்பதையும் எப்பொழுதும் அவர் தவறவிடுவதே இல்லை. அந்த இரண்டு பெருங்காப்பியங்கள் முழுவதும் அவருக்கு மனப்பாடமாய் இருந்தது.

அனைத்தையும்விட தம்முடைய வயது எல்லையை எட்டும் துடுக்கும் மிடுக்குமுடைய இளைஞர்களின் குழுவே வேமனருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சில சமயங்களில் அவர்களுடைய விளையாட்டுகள் அமைத்தல், ஊர்க்குளத்தில் நீச்சமடித்தல், அண்மையிலுள்ள குன்றுகட்கும் பள்ளத்தாக்குகட்கும் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தல் போன்ற செயல்களால் தம்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/46&oldid=1244254" இலிருந்து மீள்விக்கப்பட்டது