பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு நூல்கள் 155 "நீறணிந்த கடவுள்" என்றார். கடல் பருகி மழை பொழியும் மேகத்தைப்பற்றி "முன்னிக் கடலைச் சுருக்கி" என்ற திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும், "ஆழி மழைக் கண்ணா” என்ற திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியாரும் ‘கருவி மாமழை என்னும் நைடதப் பாடலில் அதி வீரராமபாண்டியனாரும் கூறும் கருத்து இதனையொத்தது. இதனை நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி, தான்நல்கா தாகி விடின்' என்ற திருக்குறளில் புலவர் பெருமான் வலியுறுத்துவர், நீறுஅணிந்த கடவுள்' என்ற இப்பாடலின் எடுப்பு கம்பீரமாக அமைந்திருக்கிறது” அடுத்து, 'மண் உற விழுந்து' என்று வரைக் காட்சிப் படலத்தில் வரும் பாடலின் (பக்.25 விளக்கமும் நயஞ் செறிந்தது. "புழுதியில் படிந்த மதயானை தன் உடம்பில் ஒரு பக்கத்தைத் துதிக்கையால் துடைத்து விட்டு, மற்றொரு பக்கத்தில் படிந்த புழுதியொடு வருகின்றது. அக்காட்சி ஒரு புறம் சிவனும், மற்றொருபுறம் திருமாலும் சேர்ந்த சங்கர நாராயண வடிவத்தை ஒத்திருந்தது. வெண்புழுதி படிந்த பகுதி வெண்ணிறு பூசிய சிவனையும் புழுதி துடைக்கப் பெற்ற யானையின் இயற்கை நிறமான கருமைப் பகுதி திருமாலையும் காட்டா நிற்கின்றது. சிவனும் திருமாலும் கலந்த வடிவத்தைக் காட்டும் திருமங்கையாழ்வாரின், பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைதன் உந்தியிலே தோற்றுவித்து, கறைதங்கு வேல்தடல்கண் திருவை மார்பில் கலந்தவன்தாள் அணை நிற்பீர்' என்ற பாசுரத்தை மனத்தில் கொண்டு இப்பாடலைக் கவிச் சக்கரவர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தோன்று கின்றது.” 2. திருவெம்பாவை - 16 3. திருப்பாவை -4 4. குறள் -17 5. பெரி. திரு. 3.49