பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

திருவிளையாடற்புராணம்

முடியாது; எனினும் திச்கற்ற நிலையில் மனித சஞ்சாரமில்லாத அந்தக் காட்டு முட்புதர் நடுவில் அது கிடப்பது கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தனர். இருளில் மாணிக்கத்தைக் கண்டது போல் பேருவகை அடைந்தனர். மாயை இடையே ஞான ஒளி கண்டது போல் மனநிறைவு பெற்றனர்.

தம் பாவம் போக்கிய பெருமான் வெய்யில் பட்டு எழில் மாழ்குவது கண்டு வேதனையுற்றான்; தான் பிடித்திருந்த குடையைக் கொண்டு நிழல் உண்டாக்கிக் காளத்தி நாதனைக் கண்ட கண்ணப்பர் போல் நீங்காத காதலோடு பெருவியப்போடு பூசனை செய்யமுற்பட்டான். பக்கத்தில் இருந்த பொற்றாமரைக் குளத்தில் சென்று நீரில் முழுகி நிர்மலனாகிய இறைவனை வழிபடத் தாமரை மலர்களைப் பறித்தவந்து இட்டு அருச்சனை செய்தான்; குளத்து நீரைக்கொண்டு திருமஞ்சனம் செய்தான்; மலரிட்டு வழிபட்டான்.

முள்ளும் புதரும் நீக்கி அந்த நிலப்பரப்பினைத் தூய்மைப் படுத்தினான். வெயிலும் மழையும் தடுக்க வானத்தில் இருந்து விமானம் ஒன்று தருவித்தான். மயன் என்னும் தெய்வத் தச்சனைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் அமைய அவ்விமானத்தை அமைத்தான். எட்டு யானைகள் நின்று தாங்குவது போலச் சிற்பங்கள் தூண்களாக நிறுத்தப்பட்டன. போன்னாலான அவ்விமானம் திருச்சிற்றப்பலத்தில் சிதம்பரத்துக் கோயிலுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல இருந்தது, தேவர்கள் இந்திர உலகத்துக்குச் சென்று கற்பகத்தரு போன்ற உயர்ந்த தருக்கள் ஐந்தும் கொண்டு வந்தனர். பல்வகை மணிகளையும் சந்தனம், கங்கை நீர், திருப் பள்ளித்தாமம், பஞ்சகவ்வியம், தேன், பழம், திருவிளக்கு