பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நாலடியார் செய்திகள்
அறத்துப்பால்
1. செல்வம் நிலையாது
(செல்வம் நிலையாமை)

அன்பு மனைவி அருகிருந்து ஊட்டுகிறாள்; சுவை ஆறு என்பதை அவன் அறிகிறான்; “உண்க அடிகள்!” என்று உணர்த்துகிறாள்; வயிறு நிறைகிறது; மனம் குளிர்கிறது; வாழ்க்கை தளிர்க்கிறது; எதுவும் இனிக்கிறது; இவை அன்று; இன்று செல்வம் அழிந்தது; அஃது அவனைவிட்டு ஒழிகிறது; ‘வறியவன்’ என்று அவனை வாழ்வோர் உரைக்கின்றனர்; கூழுக்காகக் கையேந்தி நிற்கிறான்; பிறர் வீட்டுப் படிகட்டு ஏறும்போது எல்லாம் அந்த வீட்டு மகள் அவனுக்குத் தாயாகிறாள்; “அம்மா தாயே!” என்று அழைக்கிறான்; அவள் “ஏன்யா! என்ன தேவை?” என்கிறாள். முன்பு உணவு சுவைத்தது; இன்று கைவிரல்கள் சுவைக்கின்றன. அவன் குழந்தையாகிக் கைவிரல்களைச் சுவைக்கிறான். காலம் பார்த்தாயா! எப்படி இருந்தவன், எப்படி ஆகிவிட்டான்? செல்வ வாழ்க்கை முன்பு; அல்லல் சேர்க்கை இன்று. செல்வம் நிலைக்கும் என்று செருக்குக் கொள்ளாதே; ஒரு பருக்கைச் சோற்றுக்குத் தெருத் தெருவாக அலையும் காலம் வரும். பணம்! அதனை அடக்கி ஆளவில்லை