பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


மிக்கவன்; அவன் காந்தி சீடன் ஆகினால் அஃது உண்மையில் வியப்புச் செய்திதான். வலிவுள்ளவன் மெலிவு காட்டுவது பாராட்டத்தக்கது. இல்லாதவன் கொடை மதிக்கத்தக்கது.

குடிப்பெருமை உடையவர் என்றும் கண்ணியமும் கட்டும் கொண்டு நடப்பர். நற்குடிப் பிறந்த நயத்தால் நாகமெனச் சீறுபவன் வேகம் அடங்கி விரும்பத்தக்கவன் ஆகின்றான். மந்திரத்துக்கு நாகம் கட்டுப்படுகிறது. குடிப்பெருமைக்குத் தனிமனிதன் விட்டுக் கொடுக்கிறான். உயர்குடிப் பிறந்தவர்கள் சினம் காட்டுவது இல்லை.

“வெற்றிக்கு வழியாது? அதனைக் கற்றுத் தருகிறது நாலடியார். எதிரி அவன் கண்டபடி பேசினாலும் நீ பதறி அவனை எதிர்க்காதே. தீமைகளைக் கண்டும் காணாமலும் விட்டுவிடு; இஃது உனக்கு ஏற்றம் தரும்; இது நாலடியார் சொல்லும் மாற்றம்.”

“உன் நண்பன்தான்; நீ சொன்ன சொற்களை அவன் சுடுசொற்களாக ஏற்கிறான்; தீயினால் சுட்டபுண்; அதன்வடு மாறவில்லை. வெந்நீர் தணிந்தால் தண்ணீர் ஆகிறது. பெரியோர் சினம் வெந்நீர், அஃது ஆறாமல் இருக்காது; விரைவில் குளிர்ந்துவிடும்.”

“நன்றி ஒருவர் செய்தக்கால் அந்நன்றியை மறவாமை நயப்புடையதாகும். அடுக்கிய இடுக்கண்கள் பல செய்திருந்தாலும் அவற்றை வடுக்களாகக் கொள்ளார் மேலோர். நாய் கடிக்கிறது என்றால் அதனைத் திருப்பிக் கடிக்கவா முடியும்? கீழ் மகன் தடித்துப் பேசுவான்.