பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

திருவிளையாடற்புராணம்


"மானதம், வாசிகம், காயிகம் எனத் தவம் மூன்று வகைப்படும். அவற்றுள் சிவனைத் தியானித்தல், புலனடக்கம். தரும தானங்கள் மானதம் எனப்படும். வாசிகமாவது ஐந்தெழுத்து ஓதல்; வேத பாராயணம் செய்தல், தோத்திரங்கள் தருமங்கள் எடுத்துப் பேசுதல் முதலியனவாம். காயிகமாவது சிவத்தலங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று தீர்த்தங்களில் நீராடி வழிபடுதல் முதலியனவாம். கோயில் திருப்பணியும். இவற்றுள் அடங்கும். இவற்றுள் இம்மூன்று தவங்களுள் காயிகமே மேலான்து ஆகும். அனைவரும் எளிதில் செய்யத் தக்கது ஆகும். அவற்றுள்ளும் தீர்த்த யாத்திரையே மிகச் சிறந்தது ஆகும். கங்கை, யமுனை, முதலிய நீர்களில் நீராடி இறைவனை வழிபடுதல் மிகவும் போற்றத் தக்கதாகும். தனித்தனியாக இந்நீர்களில் நீராடுவதைவிட அது சென்று படியும் கடலில் நீர் ஆடுவது மிகவும் எளியது ஆகும்" என்றான்.

"உப்புக் கரிக்காதா?"

"தப்பு அப்படிச் சொல்வது; சாத்திரம் கூறுவது; அது பழிக்கக் கூடாது" என்றான்.

பொன்மாலைக்குப் புது ஆசை வந்தது. மதுரைக்குக் கடல் நீர் வருமா என்ற ஆசை உண்டாயிற்று.

கவுதமர் சென்றதும் மகளை அணுகித் தன் ஆசையைத் தெரிவித்தாள்.

"இது என்னம்மா புது ஆசை?"

"உன் கணவனால் முடியாதது என்ன இருக்கிறது; குண்டோதரனுக்குச் சோறு போட்ட போது கங்கையையே அழைக்கவில்லையா, சிவனையே