பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழி தீர்த்த படலம்

15


பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனிடம் நூற்கடல் கண்ட பிரமனும் அமுதக் கடலில் திளைத்த இந்திரனும் சென்று தம் குறையைத் தெரிவித்தனர். அறிதுயிலில் அமர்ந்திருக்கும் அரிக்குப் பழைய நினைவுகள் வந்தன.

"தேவர்களும் அசுரர்களும் பகை மறந்து கடலில் அமுதம் கடைய ஒன்றுகூடித் திருமாலை அடைந்தனர். அப்பொழுது அவர்கள் படைகளை வைத்துவிட்டுக் கடைதல் தொழிலுக்கு வரவேண்டும் என்று சொல்லத் தவம் செய்து கொண்டிருந்த ததீசி முனிவரிடம் இருவரும் தம்தம் படைக்கருவிகளை ஒப்படைத்துவிட்டுப் பாற்கடல் கடைதலுக்கு வந்துவிட்டனர். அமிர்தம் பெற்ற மகிழ்ச்சியில் தாம் விட்டுவைத்த கருவிகளைக் கேட்டுப் பெற மறந்தனர்.

வைத்தவர் திரும்பி வருவார்கள் என்று காத்திருந்த முனிவர் அலுத்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருந்தது. அவற்றை விழுங்கி விட்டார். அவை அத்துணையும் உருண்டு திரண்டு அவர் முதுகு தண்டமாக உருவெடுத்துள்ளது. யோக தண்டத்தை வைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டியிருந்த ததீசி முனிவரிடம் சென்று அதனைக் கேட்டுப் பெறலாம்; அவர் இல்லை என்ற சொல்ல அறியமாட்டார்" என்று திருமால் அவர்களுக்கு அறிவித்தார்.

ஈத்துவக்கும் இன்பம் அறிந்த அச்சான்றோன் தேவர்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை அழித்துக்கொண்டு முதுகு தண்டினைத் தானமாக அளிக்க முன் வந்தான். யோக நிலையில் நின்று மூச்சை அடக்கிக்கொண்டு பிரமகபாலம் வெடிக்க அதன் வழியாகத் தன் உயிருக்கு