பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழி தீர்த்த படலம்

11

கலைகளுக்கு ஆட்பட்டுவிட்டனர்; அளகைவேந்தன் குபேரனிடத்தில் இந்த அமராவதியையே அடகு வைக்க வேண்டியதாகிவிட்டது" என்றான்.

"காரணம்?"

"இன்பத்தில் மூழ்கிக் கிடந்த நாட்களில் இணையற்ற ஆசிரியர் வந்த போதும் அவரை மதிக்கவில்லை; ஆசிரியர் இல்லாமல் வேள்விகள் நடத்த முடியவில்லை; வேள்வி இல்லை என்றால் வேத முழக்கமும் இல்லை; அறம் குன்றி விட்டது; அதனால் சோம்பலும் பெருகிவிட்டது. தேவர்கள் உற்சாகமின்றs உலவுகின்றனர்"

"இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?"

"வேள்விகள் நடத்தக் கல்வித் தேர்வு மிக்க ஆசிரியர் ஒருவரை நீங்கள் அனுப்பி வைத்து உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

ஆசிரியனை மதிக்காத இவனுக்குத் தக்க பாடம் கற்பித்துத் தர வேண்டும் என்று யோசனை செய்தான். அவன் செய்த தவற்றை உணர வேண்டும் என்பதற்காக அசுர குரு ஒருவனை அவன்பின் அனுப்பி வைத்தான்.

"வியாழன் வரும் வரை காத்திரு சனியன் விலக ஞாயிற்று ஒளி தேவைப்படுகிறது. உன் வறுமை ஒழிய அதுவரை அசுர குருவை வைத்து யாகம் நடத்து" என்று அறிவித்தான்.

வந்தவன் மூன்று சிரங்களை உடையவனாக இருந்தான். இந்த விபரீத பிறவி கண்டு வியந்தான்.

"இவன் பெயர்?"