பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


அவளை மருவிக் கெடுவது இந்த ஆள், இவன் ஒரு நாளைக்கு ‘அலி’ என்னும் சொல்லுக்குப் பலியாவது உறுதி.

பக்கத்து வீட்டுப் பத்தினியோடு இவன் செய்யும் சல்லாபம் அதனை எப்படிக் கழுத்தை நீட்டியவள் பொறுத்துக் கொள்வாள்? “பத்துப் பேர் அறியப் பந்தக் கால் எழுப்பி அவளை மனைவி என்று ஏற்ற நீ இந்தக் கந்தல் துணியை எப்படி நாடலாம்? உன் மனைவி மெல்லிய மனம் மல்லிகைப்பூ; அது வாடாதா! இது துரோகம்; அதன் காரணம் பிறன் மனையாள்பால் நீ கொண்ட மோகம்.”

“அரவு அழகாகத்தான் இருக்கிறது; அது நஞ்சு: கரவு என்பது அறிய மாட்டாய்; படம் எடுத்து ஆடுகிறது; அதனை நடம் என்று நயக்கிறாய்; நச்சு உடையது அது; அஃது உன்னை நக்கத் தேவை இல்லை; நீயே அது நஞ்சு உக்க அதன்பால் செல்கிறாய். இது பிள்ளைமை விளையாட்டு அன்று, கள்ளம் அமை உயிர் ஆட்டு; மரணத்தோடு விளையாடும் புதுக்கூட்டு.”

நீதிகள் எடுத்து ஓதி உரைத்தாலும் அவன் அவற்றை ஒரு சேதி என்று ஏற்க மறுக்கிறான்; காரணம் மீதூர்ந்த காமம்; அஃது உடல் இயற்கைதான்; என்றாலும் அதனை அடுதல் அறிவின் செய்கைதான்; அறிவுடையவர் காமம் கரை மீறாது கட்டுக்குள் அடக்கி வாழ்வர்; இயற்கை என்று மிகைக்கை செய்து அறிவாளி இத்தவறு செய்யமாட்டான்.

பிறன் மனை நயத்தல் இளமை செய்யும் குறும்பு; அது காமத்தின் அரும்பு; அது கொடிது; கடிது;