பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

திருவிளையாடற்புராணம்

படுத்த வேண்டிய ஒன்று என்று முடிவு செய்தார். எப்படி எல்லையைச் சுட்டிக்காட்டுவது என்ற தொல்லை, ஏற்பட்டது.

அதற்கு வழியையும் கண்டார்; தன் கரத்தில் ஆபரணமாகச் சுற்றிக்கொண்டிருந்த ஆலகால நஞ்சைக்கொண்ட பாம்பினை ஏவினார். அது தன் வாலையும் தலையையும் தொட்டுக் கொண்டு ஒரு சுற்று சுற்றியது. அதுவே மதுரையின் நில எல்லையாகியது.

பாண்டியன் சுற்றிலும் சுவர் எழுப்பிக் காவல்மதிலை எழுப்பினான். தெற்கு வாயிலுக்குத் திருப்பரங்குன்றமும், வடக்கு வாயிலுக்கு இடப மலையும், மேற்கு வாயிலுக்குத் திருவேடகமும். கிழக்கு வாயிலுக்குத் திருப்பூவணமும் எல்லைகளாக அமைந்தன. மதிலுக்கு ஆலவாய் மதில் எனவும் நகருக்கு ஆலவாய் நகரம் எனவும் பெயர்கள் அமைந்தன. அந்நகரத்தில் புத்தம் புதிய மண்டபங்களையும் கோபுரங்களையும் மாளிகைகளையும் கட்டி அழகுபடுத்தினான். நகர் என்றாலேயே மாளிகை என்ற பொருள் உண்டு. அதற்கேற்ப அவன் ஆட்சிக் காலத்தில் நகரில் மாளிகைகள் எழுந்தன.

திங்களின் மதுரத் துளிகள் பட்டதால் மதுரை என்றும், மேகங்கள் மாடங்களைப் போலக் கவிந்து நகரைக் காப்பாற்றியதால் கூடல் என்றும், இப்பொழுது திருவாலவாய், என்றும் அந்நகருக்குப் பெயர்கள் அமைந்தன. 

50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் அவ்வப்பொழுது போர்கள் மூண்டன. பாண்டியர்கள் கோயில்