பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. ஐரோப்பிய காலம் (17, 18,
19 ஆம் நூற்றாண்டுகள்)

உரைநடை வளர்ச்சி

ஐரோப்பியர் வருகைக்குப் பின் இலக்கியங்கள் உரை நடையில் வெளிவரத் தொடங்கின, நாவல் சிறுகதை முதலாய புதிய இலக்கிய வகைகளைத் தமிழகத்திற்கு அவர்கள் அறிமுகப்படுத்தினர்; அகராதிகளைத் தொகுத்தனர். இதனையொட்டிப் பிறரும் உரைநடையில் எழுதத் தொடங்கினர், உரைநடை வளர்ச்சி பெற்றது.

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு

கிறித்தவப் பெருமக்கள் சிறப்பாகப் பாதிரிமார்கள தமிழ் மொழியின் பெருமையினையும், இலக்கிய இலக்கணச் சிறப்புகளையும் உலகறியச் செய்தனர்.

தமிழில் இக்கால வளர்ச்சிக்குக் கடந்த முந்நூறு ஆண்டுகளாகக் கிறித்துவப் பெருமக்கள் ஆறறிய தொண்டே முக்கிய காரணமெனின் அது மிகையாகாது.

வீரமாமுனிவரும், ஜி. யூ. போப்பும், டாக்டர் கால்டு வெல்லும் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர்.

வீரமாமுனிவர்

இவர் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்பது; இத்தாலி நாட்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார், பல மேனாட்டு மொழிகளில் புலமை பெற்றார், சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார்; பிற தென் மொழிகளையும் கற்றுணர்ந்தார். தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார்; சதுரகராதியை உருவாக்கினர். இது பெயர், பொருள்,