பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

விஞ்ஞான இதழ் ஒன்றனை வெளியிடுகிறார். பேசும் படம், பொம்மை முதலியன திரைப்பட விமரிசன இதழ்களாகும் துக்ளக் எனும் அரசியல் விமரிசன இதழைச் சோ வெளியிடுகிறார். அஃது எள்ளலும், நையாண்டியும் மிக்கது. மங்கை, மங்கை மலர் முதலான இதழ்கள் மகளிர்க்காக வெளிவருகின்றன.


தமிழ்நாட்டு வரலாறு

வடக்கே வேங்கடமும், தெற்கே குமரிமுனையும் தமிழகத்தின் சங்க கால எல்லைகளாகும். இதனைப் பண்டு மூவேந்தர் ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களும் அக் காலத்தில் வாழ்ந்தனர். அடுத்துப் பல்லவரும் நாயக்கரும் தமிழகத்தை ஆண்டனர். தமிழக மன்னர்கள் தம் ஆட்சியில் கல்வெட்டுகளை வெட்டுவித்தனர். அக்கல்வெட்டுகளும். இலக்கியங்களும் பண்டைத் தமிழக வரலாற்றை அறியப் பெரிதும் துணை புரிகின்றன.

தொடக்கத்தில் தமிழ்நாட்டு வரலாற்றைச் சரித்திரப் பேராசிரியர்கள் சிலர் ஆங்கிலத்தில் வெளியிட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியும், இராமச்சந்திர தீட்சதரும், மீனாட்சியுமாவர்.

அன்மைக் காலத்தில் வரலாற்று நூல்களுள் சில தமிழில் வெளிவந்துள்ளன. டாக்டர் கே. கே. பிள்ளை “தமிழக வரலாறும் பண்பாடும்” எனும் நூலை வெளியிட்டுள்ளார். சதாசித பண்டாரத்தார் எழுதிய பிற்காலச்சோழர் வரலாறும் பாண்டியர் வரலாறும், இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் பாண்டிய வரலாறுகளும் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் வரலாறுகளும், டாக்டர் நாகசாமி எழுதிய இராசராசன், மாமல்லவன் வரலாறுகளும், அவ்வை சு. துரைசாமிப்