பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாபாதகம் தீர்த்த படலம்

85


அங்கே இருந்தால் அரசன் ஆட்கள் பிடித்துச் சிறையில் இடுவார்கள் என்று அஞ்சி வீட்டில் உள்ள விலை மிக்க பொருள்களை எடுத்துச் சுருட்டிக் கொண்டு வேற்றூர் சென்று பிழைக்கலாம் என்று புறப்பட்டான். அவனோடு அவன் தாயையும் அழைத்துச் சென்றான்.

காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது முரட்டுக் கள்வர் சிலர் வழிமடக்கி அவன் பொருள்களைக் கவர்ந்தனர்; அவன் தாயை இழுத்துச் சென்று அவளைக் கொடுமைப்படுத்தினர். அவள் வாழ்க்கை சீரழிந்தது. இவன் மட்டும் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான். கைப்பொருளை இழந்தான்: தாயையும் பிரிந்தான்; தந்தையையும் கொலை செய்து விட்டான்.

அரசன் ஆணையில் இருந்து தப்பித்துக் கொண்டான் என்றாலும் அவன் மனம் அமைதியை இழந்து விட்டது. அவன் பழைய காலத் தவறுகள், அந்த நினைவுகள் அவனை அலைக்கழித்தன. சட்டத்தில் இருந்து தப்பியவன் தன்னிடமிருந்தே தப்ப முடியவில்லை. கால் சென்ற வழியே அவன் பித்துப் பிடித்தவன் போல் அலைந்து திரிந்தான். எதுவும் பிடிப்பு இல்லாமல் அடிபட்ட நாய் போல் வேதனையோடு உலாவினான்.

மதுரைத் தெருக்களில் நடந்து சென்றான். மீனாட்சி அம்மை திருக்கோயில் முன் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது சொக்கேசர் தம் திருக்கோயிலுக்கு வெளிவயே