பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம்

73

செய்ய முடியுமா என்று கேட்டான்

ஆழம் தெரியாமல் காலை விட்டவன் கதியாயிற்று. வேழத்திடம் தந்த கரும்பை உயிர் பெற்று எழுந்து கடித்துத் தின்று அதை முறுக்கி வீழ்த்தியது. மதம் கொண்ட யானையாக அது மதர்த்து எழுந்தது. சித்தரின் திருக்குறிப்பை அறிந்து கல்யானை பாண்டியனின் முத்து மாலையை இழுத்துப் பறித்துத் கொண்டது. கஞ்சுக மாக்கள் கைத்தடி கொண்டு துதிக்கை உடைய யானையைத் தாக்க ஓங்கினர்; அது முத்து மாலையைச் சத்தம் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டது; பாண்டியன் சினந்து சித்தரை உருத்துப் பார்த்தான். காவலனின் குறிப்பு அறிந்த ஏவலர் சிலர் சித்தரை அடிக்க ஓங்கிய கை அசையாமல் நின்றுவிட்டது. அவர்கள் அடியெடுத்து நகர்த்த மாட்டாமல் பதுமை என நின்றனர்; இந்தப் புதுமை கண்டு விதிர் விதிர்ப்பை அடைந்தனர்; அன்பும், அச்சமும் தோன்றத் துன்பம் தந்தமைக்கு வருந்திச் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அவர் அவனைப் பார்த்துச் சிரித்து இவை எல்லாம் எம் சித்து விளையாடல்; உம்மோடு பரிகசித்து விளையாட வந்தோம். நீ வேண்டுவது கேள்" என்றார். யானை தான் விழுங்கிய முத்துமாலையைத் திருப்பி அவன் கையில் கொடுத்தது.

பொன்னும் பொருளும் மானுடர் முயன்று பெறுவன; கல்வி கற்று அறிவது; ஆட்சி வீரத்தால் விளைவது; செல்வம் தொடர்ந்து வருவது; எல்லாம் உடைய எனக்குக் கட்டி அணைக்க மனைவி உண்டு; என்னை எட்டி