பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

திருவிளையாடற்புராணம்

கொண்டு வந்து சேர்த்தார். இதுவும் மதுரைத் தலத்துக்குப் பெருமை சேர்த்தது. 

10. மலையத்துவசனை அழைத்த படலம்

சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தரர் தடாதகைப் பிராட்டியை அழைத்துக் கொண்டு ஏழுகடல் வந்து குவிந்த வாவியின் கரையிலே அழகிய சோலையில் இருந்து கொண்டு அடுத்துச் செய்ய வேண்டுவது குறித்துப் பேசினார். தீர்த்த மேன்மை அறிந்து அன்னை காஞ்சனைக்காக அழகுற நிரப்பிய கடல் நீரில் வந்து குளித்துப் பயன் பெறுமாறு சுந்தரர் கூற அவ்வாறே காஞ்சனை அம்மையை வாவிக்கரைக்குத் தடாதகை அழைத்து வந்தாள்.

குளித்துக் களித்து மகிழ அவள் அங்கு வரவில்லை; சாத்திரப்படி அதில் முழுகி நற்பயன் பெறவே அங்கு வந்திருந்தாள். சடங்குகள் அறிந்துசொல்வதில் சதுரர்கள் ஆகிய புராண நூல் கேள்வியர் தம்மை நோக்கிக் கடல் நீர் குடைந்திடும் கடமைகள் யாவை எனக் கேட்க விதிமுறை அறிந்த அந்த வேதியர்கள் "மாசற்ற கற்பினாய்! மகிழ்நன், பெற்ற மகள் இவர்கள் கைத்தலம் அல்லது கன்றின் வால் இம்மூன்றுள் ஒன்றைப் பற்றிக் கொண்டே கடல் நீராடுதல் மரபு" என்று ஓதினர்.

"கைப்பிடித்த கணவனும் இல்லை; பெற்று வளர்த்த மகளும் இல்லை; கன்றின் வால் தான் எனக்குக் கிடைத்தது. இது விதியின் செயல் என்று தன் கதியை எடுத்துக் கூறிக் கதறினாள். தடாதகை தன்னுயிர்த் தலைவனை அடைந்து பணிந்து தன் அன்னையின் குறையை எடுத்து உரைக்கத் தென்னவனைக் கொணர்வதற்கு அவர் சிந்தனையுள் ஆழ்ந்தார். அவன் வரவேண்டும்