பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
இன்பம்

பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்

இன்பம் இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றிப் பொள்ளாச்சி மா. வேங்கடாசலம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது

இன்பம் என்பது எண்ணத்தின் ஒரு வகைத் தோற்றம்; துன்பமும் அதுபோன்றதே. இத் தோற்றம் தோன்றாவிடத்து, எண்ணமானது, பொதுநிலை, அல்லது சாதாரண நிலை அல்லது இன்ப துன்பமில்லாத நிலையில் இருக்கிறது. எண்ணத்திற்கு அதனோடு தொடர்புடைய அறிவு வாயிலாகத்தான், இத்தோற்றம் ஏற்படுகிறது. அறிவு தனக்குள்ள மற்றோர் தொடர்பான ஒரு புலன் அடையும் உணர்வை, எண்ணத்திற்குக்