பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

அடிப்படைக் கருத்துகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுருங்கக் கூறினால், மதங்களுக்கும் அறிவியலுக்குமிடையே நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஒரு மாபெரும் போராட்டமே இன்று நடந்து கொண்டுள்ளது.

நீக்கமற நிறைந்துள்ள அறிவியல் தாக்கம்

அறிவியல் அனைத்து மட்டங்களிலும் தன் செல்வாக்கை, ஆதிக்கத்தை அழுந்தப் பதித்துக் கொண்டுள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வைக்கூட நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை முறையாக காலையில் எழுந்ததிலிருந்து ஒரு மணி நேரம் அறிவியலின் துணையின்றி என் வாழ்க்கையை நடத்திக் கொள்வேன் என உறுதியெடுத்துக்கொண்டு செயல்பட்டுப் பாருங்கள். பல் துவக்க பிரஷை எடுக்காமல், பேஸ்டைத் தொடாமல், ஹீட்டரைப் போடாமல், கேஸைப் பற்றவைக்காமல், குக்கரை கேஸ் அடுப்பில் ஏற்றாமல் இப்படியே அறிவியலால் விளைந்த சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் நம் அன்றாட வேலைகளை அரையங் குலம்கூட நகர்த்த முடியாமல், உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்தபடியே இருக்க முடியுமே தவிர வேறு எதுவுமே செய்ய இயலாது. அந்த அளவுக்கு அறிவியலினுடைய தாக்கம் இன்றைக்கு நம் வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்டது.

இணைய முடியா இணைகோடுகளா?

அறிவியலின் வளர்ச்சி கண்டு பிற மதங்களெல்லாம் மிரண்டு கொண்டிருக்கின்றன. ஏனெனில், மதங்களுக்கும் அறிவியல் வளர்ச்சிக்குமிடையே ஒரு மாபெரும் இடைவெளி ஏற்பட்டிருப்பதோடு, மேலும் அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது தவிர்க்க முடியாததாகவும் அமைந்து வருகிறது. மதங்கள் விவரிக்கும் தத்துவங்கள் ஒரு புறம், அறிவியல் வளர்ச்சியால் உருவாகி வரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஒருபுறம். இரண்டும் இணைய