பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டு அதன் அடிப்படையில் சிலை வணக்க முறைகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் கிரேக்கர்கள் என்பது வரலாறு.

பெரும் புராணம் முதல் தலபுராணம்வரை
வளர்ந்த வரலாறு

வேதங்களில் கூறப்பட்டிருந்த இறைவனின் தன்மைகளைப் போற்றிப் புகழ்ந்து வந்த ஆரியர்கள், புராண அடிப்படையில் சிலை வணக்க முறையை ஏற்படுத்திக் கொண்ட கிரேக்கர்களைப் பின்பற்றி, வேதத்தில் கூறப்பட்டிருந்த இறைவனின் தன்மைகள் விவரிக்கப்பட்டிருந்த தற்கொப்ப கடவுள் சிலைகளை உருவாக்கி வணங்கத் தலைப்பட்டார்கள். இதில் மனிதக் கற்பனைகள் வெகுவாக இடம் பெற்றன. அவரவர் கற்பனைக்கேற்ப இறைத் தன்மைகளை சிலை வடிவங்கள் மூலம் விவரிக்கும்போக்கு வளர்ந்து கொண்டே சென்றது. அதற்கேற்ப கிரேக்கர்களைப் போல் புராணக் கதைகளையும் உருவாக்கலானார்கள். இது தலபுராணம் என்ற பெயரில் குக்கிராமங்கள்வரை அவரவர் பக்திக்கும் மனப் போக்குக்கும் கற்பனைத் திறனுக்குமேற்ப கடவுள் தன்மைகளை விவரிக்கும் கடவுளர்கள் நடவடிக்கைகள் அமையலாயின.

உலகெங்கும் இறைதூதர்கள்

ஏனெனில், மூல வேதங்கள், இஸ்லாமிய மரபுப்படி எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும், எல்லா மொழியிலும் தோன்றிய இறை தூதர்கள் மூலம், இறைச் செய்தி இறைவனால் இறக்கியருளப்பட்டன.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் பூமியில் இருக்கவில்லை” (திருக்குர்ஆன் 35:24)

மற்றும்,